நிறைவடைந்த மாநாடு படத்தின் ஷூடிங் – படக்குழுவினர் அனைவருக்கும் படத்திற்கு தொடர்புடைய பொருளை பரிசாக அளித்துள்ள சிம்பு,

0
507
maanadu
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் சர்ச்சை நாயகன் என்றால் அது ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு’ தான். . இருப்பினும் சினிமாத்துறையில் அவரை குறித்து பல விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எப்படியிருந்தாலும் சிம்புவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து கொண்டுதான் வருகிறது.நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர்.

-விளம்பரம்-
Image

இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார். பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர், மாநாடு படம் மீண்டும் துவங்கியது.இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி ,மனோஜ் பாரதிராஜா, டேனியல் என்று பல்வேறு நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : இளையராஜா, யுவன் யாருக்கும் இது பத்தி தெரியாது – கணவரை பிரிந்த பாவம் கணேசன் சீரியல் நடிகை.

- Advertisement -

கடந்த நவம்பர் 21 காலை 10:44 மணிக்கு ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.அதில் நெத்தியில் புல்லட்டுடன், தலையில் ரத்த காயங்களுடன், மங்காத்தா அஜித் போல ஒரு செயின் மற்றும் டாலர் என்று நமாஸ் செய்து கொண்டு இருப்பது போல அந்த பாஸ்டரரில் சிம்பு கழுத்தில் ஒரு செயின் இருந்தது. இப்படி ஒரு நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் நிறைவைடைந்து உள்ளது.

simbu

இதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழு. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த குஷியில் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைப் பரிசாக அளித்துள்ளார். மாநாடு படத்தின் போஸ்டர் துவங்கி டீஸர் வரை கடிகாரத்தின் ரெபரென்ஸ் நிறைய இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு ஏற்றார் போல கடிகாரத்தையே சிம்பு பரிசாக அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement