எப்பா, சுறா படத்த பாத்தேன், விஜய்க்கு கத கேக்க சொல்ல இப்படி தான் இருந்திருக்கும் – ட்வீட் போட்டு டெலீட் செய்த மாநகரம் பட நடிகர்.

0
3015
sandeep
- Advertisement -

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். ‘சர்கார்’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய் டபுள் ஆக்ஷனில் அசத்திய ‘பிகில்’ திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்து மாஸ் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படி தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுக்கும் விஜய் ஒரு காலத்தில் தொடர்ந்து தோல்வி பாடங்களை கொடுத்து இருந்தார். அதில் சுறா திரைப்படம் விஜய்க்கு மாபெரும் தோல்விப்படமாக அமைந்தது.

-விளம்பரம்-
Image

2010-ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படத்தினை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியிருந்தார். இதில் ‘தளபதி’ விஜய்-க்கு ஜோடியாக பிரபல நடிகை தமன்னா நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு, தேவ் கில், ரியாஸ் கான், ஸ்ரீமன் ஆகியோர் நடித்திருந்தனர். ‘தளபதி’ விஜய்யின் திரை உலக வாழ்வில் ‘சுறா’ திரைப்படம் அவருக்கு 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால், இந்த படம் மாபெரும் தோல்வியடைந்து. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பற்றி இப்போது டீவீட் செய்து இருக்கிறார் நடிகர் சந்தீப் கிஷன். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சந்தீப் கிஷான். இவர் ஏற்கனவே ‘யாருடா மகேஷ்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் சுறா படத்தை பார்த்துவிட்டு ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அதில், சுறா படத்தை பார்த்தேன் ஐதராபாத் விட இது மிகப் பெரிய டார்ச்சர் இந்த படத்தின் கதையை கேட்ட போதும் விஜய்க்கும் அப்படித்தான் இருந்திருக்கும்சந்தோஷ் கிஷனின் இந்த டீவீட்டை பார்த்த பலர் 10 வருடம் கழித்து இந்த படத்தை பார்த்துவிட்டு ட்வீட் செய்வது என்ன அவசியம் என்று கூறி வருகின்றனர். ஆனால், இந்த டீவீட்டை உடனடியாக நீக்கிவிட்டார் சந்தீப் கிஷன். இருப்பினும் இவரது ட்வீட்டின் ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement