கைய தொட்டதுக்கே கர்ப்பமா ? 90ஸ் கிட்ஸ் கதையா இல்ல இருக்கு – தமிழ் சீரியல் அட்ராசிட்டி.

0
914
Maari
- Advertisement -

ஜீ தமிழ் மாரி சீரியலை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சமீப களமாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது கதைக்களத்துடன் வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்புகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

அதிலும், குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மாரி. இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இது தெலுங்கு சீரியலின் ரீமேக் ஆக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

- Advertisement -

மாரி சீரியல்:

சீரியலில் மாரி என்கிற பெண்ணுக்கு முன்கூட்டியே நடப்பது அம்மனின் அருளால் தெரிய வருகிறது. இதனால் அவர் வரும் ஆபத்தில் இருந்து பிறரை காப்பாற்றுகிறார். இதனால் இவருடைய வாழ்க்கையில் நடக்கும் சோதனைகள் தான் சீரியலின் கதையாக சென்று கொண்டு இருக்கின்றது. மேலும், சமீபத்தில் தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரஜினி சீரியல் முடிவடைந்து இருக்கிறது. இதனால் தற்போது மாரி சீரியலை 45 நிமிடங்களாக ஒளிபரப்பில் வருகிறார்கள் .

சீரியல் கதை:

மேலும், சீரியலில் முத்து பேச்சு என்ற கதாபாத்திரத்தில் நடிகை தேவயானி நடித்து வருகிறார். தற்போது சீரியலில் கோவிலில் திருவிழா நடக்கிறது. இதற்காக மாரி சூர்யாவுடன் சமயபுரம் வந்திருக்கிறார். பின் மாரியின் வீட்டில் சூர்யா மற்றும் மாரிக்கும் முதலிரவு ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று எபிசோட்டில் சூர்யா மாரியின் கையைப் பிடிக்கிறார்.

-விளம்பரம்-

கலாய்க்கும் நெட்டிசன்கள்:

உடனே அடுத்த சீனிலேயே மாரி கற்பமாக இருப்பது போன்ற காட்சி காண்பிக்கிறார்கள். இந்த எபிசோடு தான் டிவியில் ஒளிபரப்பி இருக்கிறார்கள். இதை பார்த்தவுடன் தான் நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். அதிலும் சிலர், கையை தானே பிடித்தான் அதுக்குள்ள கர்ப்பமா! கட்டிப்பிடித்தால் குழந்தை பிறந்திடும் என்று 90 கிட்ஸ்களை ஏமாத்துற மாதிரியே சீரியல் இருக்கிறது என்றெல்லாம் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

Advertisement