நீயா நானா நிகழ்ச்சியில் நடிகர் மதன் பாபுவின் மகள் கலந்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது “நீயா நானா” நிகழ்ச்சி தான். நீயா நானா கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத். இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா நானா” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி தான் “நீயா நானா” நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள பழமை வாதங்களுக்கு எதிராக இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
நீயா நானா நிகழ்ச்சி:
அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், நட்பு, கல்வி விளையாட்டு, சமூக ஊடகம் என்று பல தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பின்னணி பாடகிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது மக்கள் விரும்பி ரசித்து கேட்ட பாடல்களுக்கு சொந்தக்காரர்களை முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி இருந்தார்கள்.
நிகழ்ச்சியில் ஜனனி மதன் சொன்னது:
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் காமெடி நடிகர் மதன் பாம்புவின் மகள் ஜனனி மதன் கலந்து கொண்டிருந்தார். இவர் ஒரு பின்னணி பாடகி ஆவார். மேலும், இவர் பல பாடல்களை பாடி இருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சியில் ஜனனி மதன் கூறியது, தனுஷ் நடிப்பில் வெளியான ரோசு ரோசு ரோசு அழகான ரோசு நான் என்ற பாடலை நான் தான் பாடினேன். பின் இமான் சாரிடம் முதல் முறையாக பாடி காட்டினேன். அவர் வீராப்பு படத்தில் போனா வருவீரோ என்ற பாடலை பாடினேன்.
கிடைக்காத அங்கீகாரம் :
ஆனால், இந்த பாடல்கள் எல்லாம் நான்தான் பாடினேன் என்று தெரியாது. காரணம் என்னுடைய பெயரும் ஜனனி. பரத்ராஜ் சாரோட பொண்ணோட பெயரும் ஜனனி. அதனால் அவர் என்னிடம் ஒருமுறை, நீங்கள் வேணும் என்றால் உங்களுடைய பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் இல்லை என்றால் கூகுளில் தேடினால் இரண்டு பேரோட பாட்டும் ஒன்னாவே வரும் என்று சொன்னார். அதற்கு நானும் என்னுடைய பெயரை ஜே என மாற்றி வைத்தேன். ஆனால், நிறைய இடங்களில் எனக்கு கிடைக்க வேண்டிய கிரிடிட் ஜே என்ற பெயருக்கு தான் கிடைக்கிறது.
ஜனனி பாடிய பாடல்கள் :
அதுபோல விஜய் நடித்த சுறா படத்தில் நான் நடந்தால் சரவெடி என்ற பாடலையும் நான்தான் பாடினேன். இந்த பாடல் ஜே என்ற பெயரில் தான் வரும். இப்போது நான் பாடும் பாடல்கள் எல்லாம் ஜனனி மதன் என்கிற பெயரில் தான் வருகிறது. எனக்கு பிடித்த மாதிரி பட வாய்ப்பு இன்னும் வரவில்லை. நான் என்னுடைய வாய்ஸில் வேற மாதிரி பாடணும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு வருவதெல்லாம் ஒரே மாதிரியான குரலில் பாடுவது தான் வருகிறது என்று கூறி இருக்கிறார்.