சமூக வலைதளத்தில் கடந்த இரண்டு தினங்களாக படு ட்ரெண்டிங்கில் இருப்பது #Pray_for_Neasamaniஎன்ற ஹேஷ் டேக் தான். இன்ஜினீயரிங் லேனர்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் சுத்தியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அது நேசமணி தலையில் விழுந்தது என ஒரு நையாண்டி தமிழ் நெட்டிசன் பதிலளிக்க, சமூக வலைதளங்களில் நேற்றில் இருந்து அநியாயத்துக்குச் சுற்றிவர ஆரம்பித்திருக்கிறார் நேசமணி.
விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான ‘ ப்ரண்ட்ஸ் ’ படத்தில் வடிவேலுவின் காமெடி வசனங்கள் எல்லோமே கல்வெட்டுப் பதிவுகள் மாதிரி ஆகிடுச்சு. அந்தப் படத்தின் காமெடி விடீயோக்கள் இப்போதும் எல்லோரும் டிவி-யிலேயும் யூடியூப்லேயும் பார்த்து ரசிக்கிறாங்க.
அதிலும் வடிவேலு இந்த படத்தில் அரண்மனைக்கு வெள்ளையடிக்க சென்றதும் நடக்கும் காமடிக்கல் தான் ஹைலைட். இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காமெடி அனுபவங்கள் பற்றி கேட்டபோது, அது மறக்க முடியாத அனுபவம் என்கிறார் மதன் பாப்.
இதுற்குறித்து பேசிய அவர், இந்த படத்துல நான் எண்ணெய்ல வழுக்கி விழற காட்சியை மட்டும் ஆறு நாள் எடுத்தார்னா பாருங்க ளேன். அதனாலதான் அந்த காமெடி காட்சிகள் இன்னும் உயிர்ப்போட நாங்க கோப எக்ஸ்பிரன்ஸ் காட்டணும். ஆனா, சிரிப்பா வரும். சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த நினைச்சாலும் வடிவேலுவோட எக்ஸ்பிரன்ஸ் எங்க எல்லாரையுமே சிரிக்க வச்சிரும் என்று கூறியுள்ளார்.