பேமிலி மேன் தொடரை பார்த்துவிட்டு பிரபாகரனின் புகைப்படத்தை பதிவிட்டு மிர்னாலினி போட்ட பதிவு. (சூப்பர் டீலக்ஸ்ல சமந்தா கூட நடிச்சாங்களே)

0
1172
- Advertisement -

சமீபத்தில் வெளியான தி பேமிலி மேன் தொடர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா நடிப்பில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ், சந்தீப் கிஷன் போன்றவர்கள் நடித்துள்ள தி பேமிலி மேன் வெப் தொடர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த தொடரின் ட்ரைலர் வெளியான போதே இந்த தொடரில் தமிழகர்களை தீவீரவாதிகளாக காட்டவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் இந்த தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றன.

-விளம்பரம்-

இந்த தொடர் வெளியாகும் முன்னர் இந்த தொடரின் இயக்குனர் கூறும்போது, வெறும் ட்ரைலரை மட்டும் பார்த்துவிட்டு இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம். தமிழ் மக்கள் மீது அன்பும் மரியாதையும் உள்ளது. இந்த தொடருக்காக பல வருடங்கள் உழைத்துள்ளோம். அனைவரும் தொடர் வெளியாவதுவரை பொறுத்திருந்து பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடரை பார்த்த பிறகு நீங்கள் பாராட்டுவீர்கள் என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறி இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த தொடரை பார்த்துவிட்டு பிரபல யூடுயூப் பிரபலமான மதன் கௌரி, நடிகை மிர்னாலினி, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர். இதுகுறித்து மதன் கௌரி பதிவிட்டுள்ளதாவது, பேமிலி மேன் தொடரை பார்த்துவிட்டு பேசுங்கள் என்று இயக்குனர் சொன்னார். நான் பார்த்துவிட்டேன். அதில் த,தமிழர்களை தவறாக தான் காட்டி இருக்கிறார்கள். மேலும், சமந்தா ஏன் முகத்தில் கரியை பூசிக்கொண்டு இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல மிர்னாலினி பதிவிட்டுள்ளதாவது. பேமிலி மேன் தொடரை பார்த்தேன். நான் சொல்ல விரும்புவது ஒன்று தான். உங்கள் கதைக்கு எல்லாம் மேலானவர்கள் புலிகள்அடுத்த முறை நன்றாக முயற்சியங்கள் என்று பதிவிட்டு பிரபாகரனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். நடிகை மிர்னாலினி, சமந்தா நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement