கஜினி படத்தில் அது பிடிக்கவில்லை என்பதால் அந்த படத்தில் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டேன் – சூர்யாவிடம் சொல்லி புலம்பிய மாதவன்.

0
350
madhavan
- Advertisement -

சூர்யாவின் கஜினி படம் குறித்து மாதவன் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இடையில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் சமீப காலமாக மாதவன் நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்:

தற்போது மாதவனே இயக்கி நடித்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சிம்ரன், சூர்யா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

மாதவன்-சூர்யா பேசிய வீடியோ கால்:

படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாதவன், சூர்யா இருவரும் வீடியோ காலில் படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்து பேசி இருந்தார்கள். அதில் மாதவன் அவர்கள் கஜினி படம் குறித்து கூறியிருந்தது, கஜினி படத்தின் கதையை பற்றி முருகதாஸ் என்னிடம் வந்து சொன்னார். எனக்கு கதை பிடிக்கவில்லை இரண்டாம் பாதி நல்லா இல்லை என்பதால் நான் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். அதற்கு பிறகு அந்த கதை உங்களிடம் வந்தது என்று கேள்விப்பட்டேன்.

-விளம்பரம்-

கஜினி படம் குறித்து மாதவன் சொன்னது:

உண்மையாலுமே, கஜினி படம் பார்த்ததும் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நான் கூட இப்படி பண்ணி இருப்பேனா? என்று தெரியாது. அந்த படத்திற்காக நீங்கள் உடம்பை அவ்வளவு மெனக்கெட்டு வருத்தி நடித்திருந்தார்கள். அப்போது தான் படத்திற்காக இப்படி எல்லாம் பண்ணுவார்களா? என்று என் மனதில் தோன்றியது. நான் இந்த மாதிரி எல்லாம் பண்ணது கிடையாது என்று பல விஷயங்களை மாதவன் பகிர்ந்திருக்கிறார்.

கஜினி படம்:

இப்படி மாதவன் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த படம் கஜினி. இந்த படத்தில் சூர்யா, அசின், நயன்தாரா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் சூர்யாவின் திரைப்பயணத்தில் இந்த படம் திருப்புமுனையாக இருந்தது என்று சொல்லலாம்.

Advertisement