படம் முழுவதும் கண்ணை சிமிட்டாமல் நடித்திருக்கும் மாதவன். இதுநாள் வரை இதனை நோட் பண்ணீங்களா.

0
26793
Madhavan

அரவிந்த்சாமி, பிரசாந்த் போன்ற நடிகர்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் நடிகர் மாதவன் மட்டும்தான். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் மாதவன், தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியிலும் இவருக்கென்று தனித்துவமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். பீகாரில் பிறந்த மாதவன் ஆரம்பத்தில் படங்களில் நடித்து வந்த மாதவன் பின்னர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

Image result for madhavan thambi

பின்னர் மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து வந்தார் மாதவன். சாக்லேட் பாய் என்ற அந்தஸ்தில் இருந்ததால் இவருக்கு தொடர்ந்து ரொமான்டிக் ரோல் கிடைத்தது. ஆனால், இவரை ஆக்ஷன் நாயகனாக ஓரளவிற்கு மாற்றியது தம்பி திரைப்படம் தான். கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை சீமான் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் இந்த படத்தில் மாதவன் எடுத்த ஒரு வித்யாசமான முயற்சி பற்றி தெரியவந்துள்ளது. இந்த படத்தில் மாதவன் படம் முழவதும் கண் இமைக்காமல் நடித்துள்ளாராம் அதனை அவரே ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த ஸ்க்ரீன் ஷாட் தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இது குறித்து 2005 ஆம் ஆண்டு பேட்டி ஒன்றில் கூட மாதவன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பேட்டியில், படம் முழுவதும் அந்த கதாபாத்திரம் கண் சிமிட்டவே சிமிட்டாது. ஆனால் அதனை நான் எப்படியோ செய்து விட்டேன். அது தொழில் ரகசியம். தம்பி கதாபாத்திரம் கோபப்பட்டால் உடனே ஒரு பலமான காற்று அவர் மீது வீசும். ஆனால், அப்படி வீசியபோது தூசிகள் பறக்கும், அப்போது கண்ணை சிமிட்டாமல் வசனத்தை பேச வேண்டும். ஒருவேளை கண்ணை சிமிட்டினாள் நான் தம்பி கிடையாது என்று கூறியிருக்கிறார் மாதவன்.

-விளம்பரம்-
Advertisement