போன வாரம் தனக்கு கொரோனா வந்ததை கேலியாக பதிவிட்ட மாதவன், இப்போ அவர் குடும்பத்தில் இத்தன பேருக்கு கொரோனாவாம்.

0
1135
madhavan
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

-விளம்பரம்-

அதே போல தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஷால் மற்றும் அவரது தந்தை, சரத் குமார், கருணாஸ் என்று பல நடிகர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தனர். சமீபத்தில் நடிகர் சூர்யா கூட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார். இப்படி ஒரு நிலையில் தமிழ் மற்றும் இந்தியில் பிரபல நடிகராக திகழ்ந்து வரும் மாதவன் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் அறிவித்தார்.

- Advertisement -

ஆனால், அதனை ஒரு குறைவாக உணராமல், அமீர்கானுடன் தான் நடித்த 3 இடியட்ஸ் கதாபாத்திரங்களைக் குறிப்பிட்டு, கொரோனாவால் தானும் பாதிக்கப்பட்டிருக்கும் விஷயத்தை ட்விட்டரில் பகிர்ந்த மாதவன் ‘ஃபர்ஹான் ராஞ்சோவைப் பின்தொடர வேண்டும், வைரஸ் எப்போதுமே எங்களுக்குப் பின்னால் இருக்கிறது, ஆனால் இந்த முறை பிடிபட்டுவிட்டது. ஆனால் ஆல் இஸ் வெல்’ என்று பதிவிட்டு இருந்தார்.

தனக்கு கொரோனா வந்ததை கூட இப்படி ஜாலியாக பதிவிட்ட மாதவனின் இந்த குணத்தை பார்த்து பலர் பாராட்டினாலும், பலர் கொரோனாவை பற்றி லேசாக எண்ண வேண்டாம் கொஞ்சம் ஜாக்கரதையாக இருங்க என்று அட்வைஸ் செய்தனர். இப்படி ஒரு நிலையில் மாதவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தனது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

-விளம்பரம்-
Advertisement