இறுதியில் 8 பேரும் எப்படி கொடுமை படுத்தினார்கள் என்ற விடியோவை வெளியிட்ட மதுமிதா.!

0
80037
madhu
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடையே பரபரப்பையும் பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ள பிக் பாஸ் சீசன் 3 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் ஜாங்கிரி மதுமிதா பிக் பாஸ் சீசன் 3 இல் டைட்டிலை வெல்லும் அளவிற்கு மக்களிடையே ஆதரவையும் அன்பையும் பெற்று இருந்தவர்.ஆனால், சில வாரங்களுக்கு முன்னால் பிக் பாஸ் வீட்டின் போட்டியாளராக இருந்த ஜாங்கிரி மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

இதுகுறித்து பல வீடியோக்களும் செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. அவரிடம் கேட்டபோது என்னை வீட்டிலுள்ள எட்டு பேரும் குரூப் ராகிங் செய்து என்னை கொடுமைப் படுத்தினார்கள் என்றும், மன உளைச்சலுக்கு ஆளாகி அதனால் நான் கையை அறுத்துக் கொண்டேன் என்று கூறினார். மேலும், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட மதுமிதா அன்றைக்கு நான் செய்தியாளர்களிடம் சந்திப்பில் பேசிய அனைத்து விஷயங்களும் உண்மைதான். ஆனால் என்ன பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் மன உளைச்சல் தான், ஆனால் எனக்கு வழக்கமாக ஏற்படும் மன உளைச்சலுடன் அதிகமாக ஏற்பட்டது. மேலும், வெளியே வந்து 20 நாட்கள் அந்த மன உளைச்சல் அதிகம் இருந்தது. அதனால்தான் மக்களிடம் பேசப்போகிறேன் என்று சொன்னவுடன் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு விட்டுப் பேசினேன் என்றும் கூறி இருந்தார்.

- Advertisement -

மதுமிதா விஷயத்தில் அன்று வீட்டில் இருந்த சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர அனைவரும் சம்மந்தபட்டவர்கள் தான் என்று பல குற்றச்சாட்டுகள் வலுத்தது. இந்த நிலையில் மதுமிதா விஷயத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமை அமைப்பில் புகார் பதிவாகியுள்ளதாக. மனித உரிமை அமைப்பை சேர்ந்த விஜயலக்ஷ்மி தேவராஜன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே, மதுமிதா விஷயத்தில் விரைவில் அந்த 5 நபர்களிடம் மனித உரிமை அமைப்பு விசாரணையை தொடங்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

-விளம்பரம்-

மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்துகொண்டுதான் வருகிறது மேலும் அடிக்கடி பேட்டிகளில் பங்கேற்ற தன்னை சேரன் மற்றும் கார்த்தியை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் இரக்கமில்லாமல் கேலி செய்தார்கள் என்றும் குற்றச்சாட்டை முன்வைத்து கொண்டே இருந்தார் இந்த நிலையில் மதுமிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் வீட்டில் அந்த எட்டு பேரும் தன்னை கொடுமைப்படுத்தியதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் மேலும் அந்த வீடியோவில், 8பேர் எப்படி ragging பண்ணுவாங்க? என்று கேட்பவர்களுக்கு இந்த வீடியோ சமர்பணம். இது ட்ரைலர் மட்டுமே .மெயின் பிக்ச்சர் காண்பிக்கப்படவில்லை. பார்த்தால் நம கண்களும் கண்ணீர் குலமாய் மாறும் என்று பதிவிட்டுள்ளார்.

Madhumitha

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் மதுமிதா இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் இது வெறும் டிரைலர் தான் இன்னும் மெயின் பிக்சர் வரை இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளது மேலும் சரியாக பார்க்கப்படுகிறது ஒருவேளை நாளை இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில் மதுமிதா வேறு ஏதாவது வீடியோவை வெளியிடுவாரா என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வருகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement