மதுரவீரன் திரை விமர்சனம் !

0
3377
Madhura-veeran-movie
- Advertisement -

2015 இல் வெளியான சகாப்தம் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் கேப்டன் விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் நடித்துள்ள படம் மதுரை வீரன். இந்த படத்தை 2008 இல் வெளியான சசி இயக்கிய பூ படத்தில் ஒளிப்பதிவாளராக இருந்த முத்தையா இந்த படத்தை இயக்கி உள்ளார்.

-விளம்பரம்-

Madura-Veeran movie

- Advertisement -

படத்தில் சண்முக பாண்டியனின் அப்பாவான சமுத்திரக்கனி ஊரில் ஒரு நல்ல பெயரை கொண்டவர்.படத்தின் ஆரம்பம் முதலே கீழ் ஜாதி பிரச்சனை ,தீண்டாமை போன்ற பிரச்சனைகளை பேசி வருகிறார். பின்னர் ஜல்லிக்கட்டில் அனைத்து ஜாதி மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று ஊர் மக்களிடம் கூறிவிடுகிறார்.

இதனை எதிர்க்கும் எதிர் தரப்பினர் சமுத்திரக்கனியை கொலை செய்யது விடுகின்றனர். தனது தந்தை கொலை செய்யப்பட்டதை அறிந்த ஹீரோ மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு வருகிறார். பின்னர் அங்கு நடத்தப்படும் ஜல்லிக்கட்டில் அனைத்து ஜாதி மக்களும் பங்குபெறவேண்டும் என்ற தனது தந்தையின் வாக்கை உண்மையாக்க போராடுகிறார்.

-விளம்பரம்-

படத்தின் இரண்டாம் பாதியில் தனது அப்பாவை கொன்றவர் யார் என்று கண்டுபிடக்க சொந்த ஊர் வந்ததை மறந்து முழுவதுமாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இறங்கி விடுகிறார்.

madhura-veeran

படத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகள் வைத்தால் கைதட்டல் வாங்கலாம் என்று இயக்குனர் நினைத்தாரோ என்னவோ படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் ஜல்லிக்கட்டு போரட்ட விடியோகள் , ஜல்லிகட்டுக்காக நடிகர் விஜய் பேசியே வீடியோ என வாரி இறைத்துள்ளார்.

படத்தின் பலமே ஜல்லிக்கட்டு பற்றி பேசியது தான் ஆனால் படம் முழுவதும் ஒரேயொரு விஷயத்தை பார்ப்பது சற்று சலிப்பை தருகிறது. இப்படத்தின் இயக்குனர் ஒளிப்பதிவாளர் என்பதால் படத்தின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

Shanmuga Pandian

மேலும் படத்தில் ஹீரோவாக நடித்த ஷண்முகபண்டியன் தான் நடித்த சகாப்தம் படத்தை விட இப்படத்தில் அவரது நடிப்பு சற்று மெருகேரி உள்ளது என்றே கூறலாம். ஆனால் சற்று கேமரா பயம் உள்ளது என்பது, சில காட்சிகளில் வெளிப்படையாக தெரிகிறது. ஜல்லிக்கட்டில் நடக்கும் சாதி பிரச்சனைகளை முன்வைத்து படம் நகர்கிறது .படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷின் இசை படத்தின் பலம். குடும்பத்துடன் வந்து பார்க்கவேண்டிய படம் .மொத்தத்தில் மதுர வீரன் சகாப்தம் படைப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement