விஜய் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் சொகுசு கார் வழக்கு – ஒரே நாளில் தீர்ப்பளித்த நீதிமன்றம்.

0
362
vijay
- Advertisement -

நடிகர் விஜய் போன்ற பல தமிழ் பிரபலங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் சொகுசு கார்களுக்கு முறையான நுழைவு வரி கட்டவில்லை. என அதிகப்படியான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. சமீபத்திய காலத்தில் லன்டனில்லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் வழக்கு பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் நடிகர் விஜயை தேச விரோதியாக சித்தரித்தது தவறு என்று அவருக்கு சாதகமான முறையில் தீர்ப்பை வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

BMW X5 கார் :-

நடிகர் விஜய் 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து 65 லட்சம் ரூபாய் மதிப்பில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காருக்கான நுழைவு வரி செலுத்தவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. நடிகர் விஜய் காரை வேறொரு நபருக்கு விற்று விட்டதாக சொன்னாலும், இறக்குமதி செய்தற்காக. அவர் நுழைவு வரி செலுத்தியாக வேண்டும் எனவும், ஆவணங்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் கொடுத்தது.

- Advertisement -

தீர்ப்பு தள்ளிபோனது :-

போதிய அவகாசம் வழங்கிய போதும், எந்த பதிலும் இல்லாததால் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆவணங்களைப் பெற்று கொண்டு நுழைவு வரியை கணக்கிட்டதாகவும் கோர்ட்டில் வாதிடப்பட்டது. இந்த மனு மார்ச் 14ஆம் தேதி விசாரணைக்கு வந்த பொழுது.நடிகர் விஜயின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென வணிகவரித்துறை சார்பாக கூறியது. இது குறித்து மேலும் சில விவரங்களை கேட்ட நீதிபதி நடிகர் விஜய் வழக்கின் தீர்ப்பை தேதியே குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

விஜய் தரப்பு வாதம்:-

விஜய் தனது காருக்கு ஏழு லட்சத்தி 38 ஆயிரத்து 75 ரூபாய் செலுத்தப்பட்ட நிலையில்.இடைப்பட்ட காலத்திற்கு 30 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் என வணிகவரித்துறை உத்தரவிட்டது.இரண்டு சதவீதம் வரி விதிப்பதற்கு பதிலாக 400 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும். வணிகவரி துறையின் வாதத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போது அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது

-விளம்பரம்-

சென்னை ஐகோர்ட் தீர்ப்பு:-

இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் விஜயின் சொகுசு கார் விவகாரத்தில் அபராதத்தை ரத்து செய்யக்கூடிய நடிகர் விஜய் மனு மீது சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்தது நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவர்க்கு முன் முழுநுழைவு வரி செலுத்தி இருந்தால் அபராதம் விதிக்கக்கூடாது என்றும் 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தி இருக்காவிட்டால். அபராதம் விதிக்கலாம் என்று வணிகவரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வழக்கியது

இதைப் போலவே சொகுசு கார் நுழைவு வரி தொடர்பான மற்றொரு வழக்குக்கும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. “இறக்குமதி செய்த கார்களுக்கு நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும்” என்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு தொடர்ந்து இருந்தார். “வெளிநாட்டு சொகுசு கார்களை இறக்குமதி செய்தால் அந்த கார்களுக்குக் கண்டிப்பாக நுழைவு வரி செலுத்த வேண்டும். வணிக வரித்துறையினருக்கு அதற்கான முழு உரிமையும் உண்டு” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement