வரி செலுத்த முடியாது என்று ரஜினி தொடர்ந்த வழக்கு, எச்சரித்த நீதிபதியால் வாபஸ் வாங்கிய ரஜினி.

0
751
- Advertisement -

ராகவேந்திரா திருமண மண்படத்திற்கு சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரி விதித்துள்ளதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனுத் தாக்கல் செய்திருந்த ரஜினி, நீதி மன்றம் எச்சரித்தால் வழக்கை வாபஸ் வாங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவையும் தாண்டி சொந்தமாக கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா திருமண மண்டபத்தை வைத்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த மண்டபத்திற்கு கடந்த 2019 முதல் 2020 ஆம் ஆண்டிற்கான சொத்துவரி கடந்த பிப்ரவரி மாதம் செலுத்தப்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்கான சொத்துவரியாக ரூபாய் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி ரஜினிக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அந்த வரியை வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் அப்படி தவறினால் 2% வட்டி அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனால் மாநகராட்சி அளித்த இந்த நோட்டீஸை எதிர்த்து ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி பி.டி ஆஷா தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினி தரப்பில் வாதாடுகையில் கொரோனா தோற்று பரவலால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை திருமண மண்டபம் செயல்படவில்லை என்றும், இந்த மாதங்களில் நடப்பதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு அதற்கான தொகையை பதிவு செய்து இருந்த நபர்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டதாகவும் விவாதிக்கப்பட்டது.

1919-ஆம் ஆண்டு சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்தின் பிரிவு 105-ன் படி, 30 நாட்களுக்கு மேலாக வளாகம் காலியாக இருந்தால், வரி நிவாரணம் அளிக்க உதவுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக செப்டம்பர் 23-ம் தேதி மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஆனால் இன்றுவரை எந்த பதிலும் இல்லை என்றும் கூறினார் ரஜினி. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மாநகராட்சியின் நோட்டீசுக்கு செப்டம்பர் 23-ஆம் தேதி பதிலளித்துவிட்டு உடனடியாக நீதிமன்றத்தை அவசரகதியில் அனுகியது ஏன்? என்றும் இது போன்று மனுவை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததால் அபராதம் விதிக்கப்போவதாக நீதிபதி எச்சரித்ததைத் தொடர்ந்து தனது மனுவை வாபஸ் பெற்று கொள்வதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

-விளம்பரம்-
Advertisement