ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருந்தவரை திருமணம் செய்ய இது தான் காரணம் – முதன் முறையாக மனம் திறந்த மதுரை முத்து.

0
1287
madurai
- Advertisement -

ன்னத்திரையில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் மதுரை முத்து. இவர் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் அரசம்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். இவர் சிறு வயதில் இருந்தே மேடைப் பேச்சாளராக இருந்து இருக்கிறார். பின் இவர் பல மேடைகளில் பேசி மக்கள் மத்தியில் பிரபலமானார். அதோடு பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இவர் இருந்திருக்கிறார். அதன்பின் தொலைக்காட்சி சிரிப்புயாளராக மதுரை முத்து சின்னத் திரைக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி வந்தார். கலக்க போவது யாரு, அசத போவது யாரு, காமெடி ஜங்ஷன் போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மதுரை முத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

-விளம்பரம்-

இந்த பிரபலத்தின் மூலம் இவர் திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார். இருந்தும் சினிமாவில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றவுடன் மதுரை முத்து சின்னத்திரை நோக்கி வந்து விட்டார். பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி குத் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் ஒளிபரப்பானது. முதல் சீசனை விட இரண்டாம் சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது.

- Advertisement -

குத் வித் கோமாளி நிகழ்ச்சியில் முத்து:

அதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவையாளராக இருப்பவர் மதுரை முத்து. முதல் சீசனில் மதுரை முத்து நகைச்சுவை கோமாளியாக வந்திருந்தாலும் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து இருந்தார். ஆனால், இவர் சில வாரங்களிலேயே எலிமினேட் ஆகி வெளியே சென்றுவிட்டார். இருந்தும் இவர் நிகழ்ச்சியில் அடிக்கடி வந்து நகைச்சுவை செய்து மக்களை சந்தோசப்படுத்தி கொண்டு இருந்தார். தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி இருக்கிறது.

மதுரை முத்து கந்து கொண்ட நிகழ்ச்சிகள்:

இதில் மதுரை முத்து எப்போது வருவார்? என்று ரசிகர்கள் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதோடு புகழ் எந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சிக்கு பிரபலமோ, அதே அளவிற்கு மதுரை முத்துவும் இந்த நிகழ்ச்சியின் பிரபலத்திற்கு காரணம் என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து இவர் காமெடி ராஜா ராணி என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கு பெற்றிருந்தார். இதனிடையே மதுரை முத்து அவர்கள் லேகா என்பவரை திருமணம் செய்திருந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இவருடைய மனைவி லேகா 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார் விபத்தில் உயிரிழந்தார்.

-விளம்பரம்-

மதுரை முத்து குடும்பம்:

அப்போது அவருக்கு 32 வயது தான் ஆனது. பின் மதுரை முத்து சில மாதங்கள் கழித்து தனது மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்டார். இதற்கு பலரும் விமர்சித்து இருந்தார்கள். ஆனால், மதுரை முத்து தன் இரண்டு மகள்களுக்காக தான் திருமணம் செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் தன் முதல் மனைவி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று மதுரை முத்து கூறியுள்ளார்.

மனைவியை திருமணம் செய்தது ஏன் :

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய மதுரை முத்து ‘என் முதல் மனைவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்தது. அவரது கணவர் விட்டு சென்றுவிட்டார். அவருடைய நிலையை கேட்ட போது நான் மிகவும் வருத்தப்பட்டேன் உங்களை நான் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டேன். இரண்டாம் திருமணம் என்பதால் என்னுடைய வீட்டிலும் அவருடைய வீட்டிலும் யாரும் சம்மதிக்கவில்லை. பல எதிர்ப்புகளுடன் தான் நாங்கள் திருமணம் செய்தோம்.

Advertisement