வலியால் துடித்த கர்ப்பிணி, தடை உத்தரவின் போதும் ஓடி வந்து உதவிய காவலர், குவியும் பாராட்டு.

0
1535
sivaramakrishnan
- Advertisement -

சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை இந்தியாவில் 874 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் மற்றும் 19 பேர் உயிர் இழந்து உள்ளார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

-விளம்பரம்-
வலியால் துடித்த கர்ப்பிணி; ஓடி ...

- Advertisement -

மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக பல பேர் தங்கள் குடும்பங்களை பிரிந்து உள்ளனர். அந்த வகையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னையில் கணவர் சிக்கிக் கொண்ட நிலையில் மதுரையில் பிரசவ வலியில் துடித்த பெண்ணை காப்பாற்றி உள்ளார் காவல்துறையை சேர்ந்த உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன்.

மதுரை தேவி நகர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சென்னையில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீமதி. இவர் மதுரை வீட்டில் வசித்து வருகிறார். ஸ்ரீமதி அவர்கள் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக பிரசவ நிலையை கொண்டிருக்கும் நிலையில் உள்ளார். விடுமுறையில் மணிகண்டன் மதுரை வர தயாராக இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், இந்த கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிரதமர் மோடி ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் போக்குவரத்துகள் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து மதுரை வர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஸ்ரீமதிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டதால் தனது கணவரின் உறவினரான முருகேசனுக்கு தகவலை கூறியிருக்கிறார். ஆனால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லா வாகனங்கள் கிடைக்கவில்லை.

ஊர் திரும்ப முடியாத கணவர்... பிரசவ ...

முருகேசன் அழுதுகொண்டே அங்கிருந்த காவல் சோதனைச் சாவடிக்கு சென்று விவரத்தைக் கூறி உள்ளார். அங்கிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உடனடியாக அந்த வழியாக வந்த காரை மறித்து ஸ்ரீமதியை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், அந்த பெண்ணை காரில் ஏற்றி செல்ல டீசல் செலவுக்கும் காசு கொடுத்து மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தினார்.

சரியான நேரத்திற்கு அந்த பெண் மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டதால் அந்தப் பெண்ண்ணுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. மேலும், காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் அவர்களை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டியுள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் குவித்த வண்ணம் உள்ளன.

Advertisement