தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக அறிமுகமாகி பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் கார்த்திக் நரேன். இவர் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த துருவங்கள் பதினாறு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘மாஃபியா’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் தயாரித்து இருந்தது.
இந்த படத்தின் படப்பிடிப்பு குறைந்த நாட்களிலேயே(33 நாட்கள்) எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. மேலும், மாஃபியா படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சமீபத்தில் தான் இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி பிளாட்ஃபார்மில் வெளியானது.
அதை உலகம் முழுவதும் ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் மாஃபியா படம் அமேசானில் இருந்து நீக்க வேண்டும் என்று புது சர்ச்சை எழுந்துள்ளது. படத்தில் போதைபொருள் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சிலரது புகைப்படங்கள் காட்டப்படும். உண்மையில் அவர்கள் கனடாவின் டொரோண்டோவில் 2010 முதல் 2017ஆம் ஆண்டுவரை Bruce McArthur என்ற ஒரு சீரியல் கொலையாளியால் கொல்லப்பட்டவர்கள்.
இவர்களின் புகைப்படத்தை போதை பொருட்கள் விற்கும் கும்பல்களுக்கு தொடர்புடையவர்கள் என்று படத்தில் காண்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதற்கு அவர்களின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் இவர்களுக்கு சம்மந்தப்பட்ட குடும்பங்கள் வேதனைக்கு ஆளாகி இருக்கிறது.
இப்படி இந்த படம் குறித்து எதிர்ப்பு கிளம்பியதால் மாஃபியா சேப்டர் 1 அந்த நாட்டின் OTT இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்திய OTT இணையத்தளத்தில் அது இன்னும் இருக்கிறது. இதனை தொடர்ந்து லைக்கா நிறுவனம் எழுத்து பூர்வமாக இதற்கு வருத்தமும், படத்தில் இருந்து குறிப்பிட்ட காட்சியை நீக்கிவிட்டு பின் வெளியிடப்படும் என்றும் உறுதி அளித்து உள்ளார்.
குறிப்பிடப்பட்டவர்களின் காட்சி நீக்கப்பட்டு அப்லோட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்கள் இரண்டாவதாக நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார். ஆனால், படம் பைனான்சியல் பிரச்சனை காரணமாக வெளிவராமல் உள்ளது. மாஃபியா படம் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்த படம் எடுப்பதில் இயக்குவதில் பிசியாக உள்ளார்.