பரமாசார்யார் மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள் என்று கூறப்படும் சுந்தரசேகரேந்திர சுரேசுவது சுவாமிகள் நினைவு நாள் வரும் ஜனவரி 8ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அவரை பற்றி 7ஆம் தேதி சங்கரா தொலைக்காட்சியில் “மகா பெரியவா” என்ற சீரியல் தொடங்க உள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த சீரியலை இயக்குனர் பாம்பே சாணக்கியன் இயக்கவுள்ளார்.

இவர் ஏற்கனவே கலைஞர் டிவியில் தேன்மொழியால், நான் அவன் இல்லை, காமெடி காலனி, சாந்தி நிலையம் போன்ற சிரியலிகளில் பணியாற்றி இருக்கிறார். அதோடு இவர் பாலச்சந்தர் சிரியலிகளில் துணை இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருக்கிறது. இவர் தற்போது மகா பெரியவா என்ற சீரியலை இயக்கவுள்ள நிலையில் அவரிடம் பிரபல செய்தி ஓடம் ஓன்று பேட்டி எடுத்திருந்தது.

Advertisement

இதையும் பாருங்க : சாலையோர மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன் – தங்க மனசை பாராட்டும் ரசிகர்கள். வைரலாகும் வீடியோ.

அந்த போட்டியில் அவர் கூறியதாவது `நான் ஏற்கனவே இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னர் அக்ரஹாரா வாழ்க்கை முறையை பற்றி “கர்மா” என்ற சீரியலை இலாயக்கியிருந்தேன். அந்த சீரியலுக்கு நல்ல ஆதரவு வந்த நிலையில் பலர் ஏன் நீங்கள் மகா பெரியவரை பற்றி ஒரு சீரியல் எடுக்கக்கூடாது என்று கேட்டிருந்தனர்.இதனை பலரும் தொடர்நது கேட்டுக்கொண்டே இருந்த நிலையில் எனக்கு மகா பெரியவா குரல் கேட்டது. இதனால் தான் இந்த சீரியலை எடுக்க முடிவு செய்தேன்.

Advertisement

இந்த தொடரை இயக்கம் பாக்கியம் எனக்கு மகா பெரியவாவின் அனுகிரகத்தால்தான் கிடைத்து. அவரின் போதனைகளை அடுத்த தலைமுறைக்கு போக வேண்டும் என்ற நோக்கில் தான் அவரின் வாழ்க்கைக்கு நாடக வடிவம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது. அதனால்தான் நாங்கு தலைமுறைகள் கொண்ட ஒரு குடும்பத்தி கதையாக இதனை இயக்கவிருக்கிறேன். இந்த தொடரின் குடும்பத் தலைவர் மகா பெரியவா.

Advertisement

அவருக்கு ஒரு பிள்ளை, பேரன், கொள்ளுபேத்திகள் இருக்கின்றனர். அந்த கொள்ளுப்பேரனும், பேத்தியும் அமெரிக்காவில் இருந்து இந்தியா வருகின்றனர். அப்படி வரும் கொள்ளுப்பேரனுக்கு மகா பெரியவாவிற்கும் இடையில் நடக்கும் உரையாடல் தான் இந்த சீரியல். அதவது ஒரு காட்சியில் நமஸ்காரம் எதற்கு செய்யவேண்டும், புனூல் எதற்கு போட வேண்டும், சந்தியாவந்தனம் எதற்கு செய்ய வேண்டும் என பல கேள்விகளை அந்த பேரம் கேட்கும் போது அவருக்கு பதில் மகா பெரியவா பதில் சொல்லும் படி இந்த சீரியலை நான் உருவாக்கி இருக்கிறேன்.

மேலும் மகா பெரியவா வாழ்ந்த காலத்தில் பாகுபாடு இல்லை, பட்டியலின மக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்றிருக்கிறார். இஸ்லாமியர்க்ள மற்றும் கிஸ்துவர்க்ள பெரியவரை பின்பற்றுகின்றனர். என ஒரு குறிப்பிட சமூகத்தை பற்றி மட்டும் குறிப்பிடாமல் அனைவருக்கும் செல்லும் படி இந்த சீரியலை உருவாக்கியுள்ளேன். மற்றவர்கள் யூடியூபில் சொல்லும் படியான கருத்துகள் இந்த சீரியலில் வராது. அதே போல ஒரு ஆணவ படம் போன்றும் இருக்காது என்று அந்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

Advertisement