தன்னை மறைமுகமாக கேலி செய்த மாளவிகா மோகனுக்கு நயன்தாரா பதிலடி கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா ஹீரோக்கள் ஆதிக்கம் நிறைந்த ஒரு துறையில் ஒரு நடிகையாக இருந்து கொண்டு தனக்கான ஒரு இடத்தை பிடிப்பது எல்லாம் ஒரு நடிகையாக அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது.
ஆரம்பத்தில் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வந்த நயன் பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். மேலும், லீட் ரோலில் தான் நடிக்கும் பெரும்பாலான படங்களை தனது சொந்த தயாரிப்பில் தான் வெளியிடுகிறார் நயன். இந்நிலையில் கடந்த ஐந்து வருடங்ககளா இயக்குனர் விக்னேஷ் சிவமை காதலித்து வந்த நயந்தாரா கடந்த ஆண்டு பல பிரபலங்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இவர்கள் திருமணம் செய்து 4வது மாதத்தில் இவர்கள் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர். ஆனால் அந்த விஷயம் பெரிய சர்ச்சையாகி தமிழ் நாட்டின் மருத்துவ அமைச்சர் வரையிலும் சென்றிருந்தது. ஆனால் இதனை நயன்தாரா பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. இருந்தாலும் சில சர்ச்சைகளில் நயன்தாரா தொடர்ந்து சிக்கிக்கொண்டே இருந்தார். இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் கனெக்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் அஸ்வின் சரவணன் எடுத்திருந்தார்.இப்படத்தினை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவத்தின் ரவுடி தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும் பிருத்வி சந்திரசேகர் இசையமைத்து, மணிகண்டன் கிருஷ்ணமாச்சரியர் ஒளிப்பதிவாளராகவும், ரிச்சர்ட் கெவின் எடிட்டராகவும் கிருஷ்ணமாச்சரியர் இருந்தார்.
இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இப்படத்திற்கு நன்றி கூறும் வகையில் நயன்தாரா மற்றும் விகேஷ் இருவரும் தங்களது சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை போட்டிருந்தனர். இந்த நிலையில் கனெக்ட் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள சாலையோர மக்களை சந்தித்து பரிசு பொருட்களை வழங்கியுள்ளார் நயன்தாரா. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.