‘கெட்ட வார்த்தை பேசினால், என் அம்மாவின் ரியாக்ஷன்’ – இணையத்தில் வைரலாகும் ‘மகான்’ சிம்ரன் Template Memes

0
2271
mahaan
- Advertisement -

பொதுவாகவே சினிமா உலகில் படம் வெளியாகும் போது அதில் இருந்து ஏதாவது ஒரு காட்சி டெம்ப்ளேட்டாக சோசியல் மீடியாவில் வைரலாகுவது வழக்கம். அந்த வகையில் ஆர்யாவின் சப்பேட்டா பரம்பரையில் வெளிவந்திருந்த வாத்தியார், சூரரைப்போற்று படத்திலிருந்து ஆமாங்கய்யா போன்ற டயலாக் எல்லாம் சோஷியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆக இருந்தது. அந்த வகையில் தற்போது மகான் படத்திலிருந்து ஒரு காட்சி சோசியல் மீடியாவில் டெம்ப்ளேட்டாகி வருகிறது. விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மகான். விக்ரம் மற்றும் துருவ் இருவரும் சேர்ந்து நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தில் அப்பா-மகன் இருவருமே கதாநாயகர்களாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் நடித்து சுப்புராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இவர்களுடன் வாணிபோஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது.

- Advertisement -

மகான் படம் பற்றிய தகவல்:

படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். மேலும், மூன்று மொழியில் இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. மதுவினால் ஏற்படும் பிரச்சினைகளையும் விளைவுகளையும் இயக்குனர் படத்தில் அழகாக காண்பித்திருக்கிறார்கள். மேலும், படத்தில் விக்ரம் அவர்கள் காந்தி மகான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விக்ரம் தந்தை காந்தி வழியில் சுதந்திரத்துக்காக போராடியவர்.

மகான் படத்தின் கதை:

இதனால் தன்னுடைய மகன் விக்ரமும் அதே வழியில் வாழ வேண்டும் என்று சொல்லுவார். அதேபோல் விக்ரமும் தன்னுடைய தந்தை சொன்னது போல் 40 வயது வரை சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். பின் விக்ரம் தன் நண்பனுடன் சேர்ந்து மதுபான விற்பனையில் ஈடுபடுகிறார். 20 ஆண்டுகளுக்கு பிறகு விக்ரம் மகன் துருவ் விக்ரம் போலீஸ் அதிகாரியாக வருகிறார். பிறகு தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சண்டை தான் சுவாரசியமாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

வைரலாகும் சிம்ரன் அழும் காட்சி:

மகான் படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் விக்ரம் முதல் முறையாக குடித்து விட்டு வந்ததை அறிந்ததும் சிம்ரன் அவரை நிரந்தரமாக விட்டுவிடுவார். அந்த காட்சியை தான் நெட்டிசன்கள் இப்போது டெம்ப்ளேட்டாகசோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். விக்ரம் குடித்து விட்டதை கண்டு பிடித்து சிம்ரன் மனமுடைந்து அழும் காட்சியை வேறு ஒரு செயல்களுக்கு பொருத்தி தாய்மார்களின் நிலையைப் பற்றி கூறுகிறார்கள்.

வைரலாகும் மகான் மீம்ஸ்:

அதிலும் சிலர், சிகரெட் பிடிக்கிறார் என்று தெரிந்த பிறகு அவரது தாயார் எப்படி ரியாக்ட் செய்தார் என்று இப்படி பல விஷயங்களில் சிம்ரன் உடைய ரியாக்சனை பதிவிட்டு வைரலாகி வருகிறார்கள். தற்போது இந்த மீம்ஸ்சை ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகிறார்கள். தற்போது இது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. மேலும், மகான் படத்தை தொடர்ந்து விக்ரம் அவர்கள் கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார்.

Advertisement