மகாபாரதத்தில் கிருஷ்ணருக்கு குரல் கொடுத்தது இந்த விஜய் டிவி சீரியல் நடிகர் இவர் தானா – இத்தன நாளா இது தெரியாம போச்சே

0
1032
maha
- Advertisement -

தமிழில் மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணனுக்கு குரல் கொடுத்த நடிகர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் மிகப் பிரபலமான சீரியலாக திகழ்ந்தது மகாபாரதம். மகாபாரதம் சீரியலை யாராலும் மறக்க முடியாது.

-விளம்பரம்-

பஞ்சபாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையே நிகழ்ந்த நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட தொடர். இந்த தொடரை ஹிந்தி மொழியில் எடுத்திருந்தார்கள். அதில் ஹிந்தி ஹீரோக்கள் ஹீரோயின்கள் நடித்திருந்தனர். பின் இந்த சீரியலை தமிழில் டப் செய்து விஜய் டிவியில் ஒளிபரப்பி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் சின்ன திரையில் 100 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட முதல் இந்திய தொடர் என்ற பெருமையும் மகாபாரதம் பெற்றிருந்தது.

- Advertisement -

மகாபாரதம் சீரியல்:

மேலும், இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த தொடரில் ஆரம்பத்தில் தொடங்கி முடியும் வரை கிருஷ்ணர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மிகப் பிரபலம் என்றே சொல்லலாம். இவருக்காகவே இந்த சீரியலை பார்த்த ஒரு ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அதற்கு காரணம் இவருடைய வசீகரமான குரல் என்று சொல்லலாம்.

தமிழில் கிருஷ்ணருக்கு குரல் கொடுத்தவர்:

தமிழில் இந்த சீரியலில் கிருஷ்ணனின் குரலைக் கேட்டு பலரும் வியப்பித்துப் போவார்கள். இவருடைய இனிமையான கவிதை காவியம் குழந்தைகள் முதல் பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரையுமே கவர்ந்தது. இந்நிலையில் இந்த சீரியலில் தமிழில் கிருஷ்ணர் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்த நடிகர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் வேறு யாரும் இல்லைங்க, நடிகர் தசரதி.

-விளம்பரம்-

நடிகர் தசரதி குறித்த தகவல்:

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பார்த்திபன் மற்றும் ஜீவாவுக்கு அப்பாவாக நடித்த வருபவர் தான் நடிகர் தசரதி. இவர் தான் தமிழில் கிருஷ்னருக்கு குரல் கொடுத்தவர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றே சொல்லலாம். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் பிரபலமான டப்பிங் கலைஞரும் ஆவார். தற்போது இவர் ஈரமான ரோஜாவே 2 சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

ஈரமான ரோஜாவே 2 சீரியல்:

ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி கொண்டே என பல நடிகர்கள் நடிக்கிறர்கள். இந்த தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சீரியலில் பார்த்தி, ஜீவா இருவரும் அண்ணன், தம்பி. அதேபோல் பிரியா, காவ்யா இருவரும் அக்கா, தங்கை. இதில் காவ்யா-ஜீவா இருவரும் காதலித்து இருந்தார்கள். ஆனால், விதி செய்த வலியால் பார்த்தி- காவியாவையும், ஜீவா-ப்ரியாவையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். சீரியலில் ஜோடி மாறி திருமணம் ஆன பிறகு பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement