ஈஸ்வர்-மஹாலட்சுமி விவகாரம். புலம்பி தள்ளிய மஹாலக்ஷ்மியின் கணவர். இவர் என்ன புது குண்ட போடுறாரு.

0
5799
Mahalakshmi
- Advertisement -

தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம் ஜெயஸ்ரீ விவகாரம் தான் என்றும் சொல்லலாம். சீரியல் நடிகை ஜெயஸ்ரீ அவருடைய கணவர் ஈஸ்வரின் குடும்ப பிரச்சனை தான் சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மகாலட்சுமிக்கும், நடிகை ஜெயஸ்ரீயின் கணவருக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக ஜெயஸ்ரீ சோசியல் மீடியாவில் புகார் அளித்து உள்ளார். இதனால் ஜெயஸ்ரீ கணவர் ஈஸ்வரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தார்கள். இதனைத் தொடர்ந்து நடிகர் ஈஸ்வர் ஜாமீனில் வெளியே வந்து உள்ளார். தற்போது ஈஸ்வர், மகாலட்சுமி, ஜெயஸ்ரீ ஆகிய மூவரும் மாத்தி மாத்தி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேட்டி அளித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
தொடர்புடைய படம்

- Advertisement -

நடிகர் ஈஸ்வர் அவர்கள் ஜெயஸ்ரீ கூறுவதெல்லாம் பொய். அவள் பணத்திற்காக தான் இப்படி எல்லாம் நாடகம் போடுகிறார். அதோடு ஜெயஸ்ரீக்கும், மகாலக்ஷ்மி கணவனுக்கும் தான் தொடர்பு உள்ளது. அவர்கள் இருவரும் மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது என மீண்டும் ஒரு புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மகாலட்சுமி கூட சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, ஈஸ்வரனும் நானும் நல்ல நண்பர்கள் மட்டும் தான். அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றோ? அவருடன் வாழ வேண்டும் என்றோ? எந்த எண்ணமும் எனக்கு இல்லை. நான் என்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து பெரும் பிரச்சினையில் உள்ளேன். ஆனால், அது என்னுடைய சொந்த பிரச்சனை. அதை இவருடன் இணைத்து பேசுவது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு.

இதையும் பாருங்க : திருமண மேடையில் தனது கணவருடன் அனிதா சம்பத் செய்த காரியம். வைரலாகும் வீடியோ.

ஆனால், ஜெயஸ்ரீக்கு என்னுடைய கணவருடன் நீண்ட நாட்களாக பழக்கம் வைத்து வருகிறார் என்றும் கூறினார். இவர்கள் இருவரின் விவாதத்திற்கும் சம்பந்தப்பட்ட மகாலஷ்மி கணவர் அணில் இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார். ஆனால், தற்போது இது குறித்து அவர் பேசியது, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் எங்கள் குடும்ப விவகாரம் பயங்கர பிரச்சினையாக போய்க்கொண்டு இருக்கிறது. அதோடு ஜூன் மாதத்திலிருந்து நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது இல்லை. நான் பணம் பணம் என்று அலைபவன் கூறி எங்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், அந்த விஷயத்தில் நான் அவளை குறை சொல்ல முடியாது. ஏன் என்றால் அவளின் சூழ்நிலை எனக்கு புரிகிறது. எனக்கு இப்பவும் மகாலக்ஷிமியை ரொம்ப பிடிக்கும்.

-விளம்பரம்-
mahalakshmi husband க்கான பட முடிவு

நான் இப்போது கூட அவளைக் காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன். எனக்கு எதற்காக விவாகரத்து கொடுங்க என்று கேட்கிறாள் தான் தெரியவில்லை. அவள் திரும்பி வந்தாலும் நான் முழு மனதுடன் அவளை ஏற்றுக் கொள்வேன். அதோடு எனக்கும் ஜெயஸ்ரீக்கும் தொடர்பு இருப்பதாக பேசுகிறார்கள். ஆனால், நிச்சயம் அப்படி எல்லாம் இல்லை. நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான். மகா லட்சுமி சொன்னது போல் அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொண்டது எல்லாம் கிடையாது. இதுவரை நாங்கள் இரண்டு முறை தான் சந்தித்து உள்ளோம். அதுவும் நண்பர்கள் கூட்டம் இருக்கும்இடத்தில் தான் அவரை சந்தித்து உள்ளேன் என்று கூறினார்.

Advertisement