முதல் கணவருடன் விவாகரத்து. 43 வயதில் இரண்டாம் திருமணம் செய்த காரணத்தை சொன்ன ஊர்வசி.

0
49852
uurvasi
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி. இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சனி. திரை உலகிற்காக ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார். நடிகை ஊர்வசி அவர்கள் முதலில் மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயன் என்பவரை 2000-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. பின் நடிகர் மனோஜ்–ஊர்வசிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரமாக 2008 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள். பின்னர் நடிகர் மனோஜ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மனோஜை பிரிந்ததற்கு முக்கிய காரணம், அவரது குடிப்பழக்கம் தான் காரணம் என்று கூறியிருந்தார் ஊர்வசி.

-விளம்பரம்-
தொடர்புடைய படம்
ஊர்வசி முதல் கணவர்

- Advertisement -

அதோடு தன் மகளையும் மனோஜ் தன்னுடன் வைத்துக் கொண்டார். இந்நிலையில் நடிகை ஊர்வசி அவர்கள் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் சிவபிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதோடு இரண்டாவது திருமணம் ஆகும் போது அவருக்கு 45 வயது ஆனதாம். நடிகை ஊர்வசி அவர்கள் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து கூறியது, என்னுடைய கணவர் சிவபிரசாத் வேறு யாருமில்லை எங்களுடைய குடும்ப நண்பர். எங்கள் வீட்டில் நல்லது நடந்தாலும்,கெட்டது நடந்தாலும் அவர் தான் முதல் ஆளாக வந்து நிற்பார். அவரை எனது தாத்தா மற்றும் என் தம்பி கமலுக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டில் சில நாட்களாகவே பிரச்சினை நிலவி கொண்டிருந்ததால் மன அமைதிக்காக நாங்கள் திருவண்ணாமலைக்கு சென்று இருந்தோம்.

இதையும் பாருங்க : கில்லி படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்தவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா. புகைப்படம் இதோ.

அப்போது ரமணாஸ்ரமத்தில் தங்கி சிறப்பு பூஜைகளும் செய்தோம். அப்போது பூசாரி என்னுடைய கணவர் என்று நினைத்து மாலையைக் கொண்டு வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த சிவபிரசாத் மீது அணிவித்தார். பின்னர் சிவபிரசாத் அந்த மாலையைக் கழற்ற முயன்ற போது என்னுடைய தாத்தா கழட்ட வேணாம் அப்படியே இருக்கட்டும் என கூறினார். நாங்கள் இருவரும் பூஜை முடியும் வரை கழுத்தில் இருந்த மாலையை கழற்றவே இல்லை. அப்போது என் மனதுக்குள் பல எண்ணங்கள் தோன்றியது. அதுவரை நாங்கள் இருவரும் எங்களுடைய திருமணத்தை பற்றி நினைக்கவே இல்லை.

-விளம்பரம்-
தொடர்புடைய படம்
ஊர்வசியின் இரண்டாம் கணவர்

கடவுளே எங்களுக்கு ஆசீர்வதம் கொடுத்தது போல் இருந்தது. பின்னர் தான் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தோம். நாங்கள் இருவரும் 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். அப்போது எனக்கு 40 வயதிற்கு மேல் ஆகிறது. 40 வயதுக்கு மேலே திருமணமா?? என்று பலரும் பல விதமாக சொன்னார்கள். ஆனால், அதை எல்லாம் நான் என் காதில் வாங்கி கொள்ளவில்லை. தற்போது எங்களுக்கு ஒரு மகனும் உள்ளார். என்னுடைய மகன் பெயர் இஷான். அவன் தான் என் உலகம் என்று கூறினார். நடிகை ஊர்வசி அவர்கள் தற்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் திருமணம் சீரியலில் நடித்து வருகிறார் என்று தெரிய வந்து உள்ளது .

Advertisement