உலக நாயகன் கமலஹாசனின் எழுத்தில் இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் உருவான படம் தான் “மகாநதி”. இந்த படத்தில் கமலஹாசன் அவர்கள் கிருஷ்ணசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இது தனது மனைவியை இழந்த இரண்டு பிள்ளைகளுடன் வாழும் கதாபாத்திரம். அதில் கமலஹாசனின் மகளாக நடித்தவர் ஷோபனா. இந்த படத்தில் சோபனா பாடிய ‘ஸ்ரீ ரங்க ரங்கநாதன்’ பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளது. அதோடு இவர் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்று உள்ளார்.
அதற்கு பிறகு இவர் பல படங்களில் பாடி உள்ளார்.பாடகி ஷோபனா அவர்கள் தஞ்சாவூரில் பிறந்தவர். இவர் சிறு வயதில் இருந்தே கர்நாடக சங்கீதத்தை முறையாகக் கற்றவர். பாடகி சோபனா அவர்கள் சினிமாவில் பாடுவதை விட்டு கர்நாடக சங்கீத உலகம் முழுவதும் பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். மேலும், பல கர்நாடக சங்கீத ஆல்பங்களை வெளிநாடுகளில் கூட வெளியீட்டு உள்ளார். இதனால் அவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பாடகி ஷோபனா அவர்கள் ரெக்கார்டிங் நிறுவனத்துக்கு எதிராக மனுத் தாக்கல் செய்து உள்ளார். பாடகி சோபனா அவர்கள் மனு தாக்கலில் கூறியது, 1996 ஆம் ஆண்டு கந்த சஷ்டி கவசம் பாடலை பாடும் படி சென்னையிலுள்ள சிம்போனி ரெக்கார்டிங் நிறுவனம் என்னிடம் கேட்டார்கள். வடபழனியில் உள்ள ஸ்டுடியோவில் இந்த பாடல் ஆல்பம் தயாரானது.
அதோடு ஆறு பாடல்கள் அடங்கிய இந்த ஆல்பம் பெரிய அளவு வெற்றி பெற்றது. இந்த பாடல்கள் எல்லாம் நான் 14 வயதில் இருக்கும் போது பாடியது. அதுமட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கான பாடலையும் பாட வேண்டும் என்றும் சிம்போனி நிறுவனம் கேட்டது. அதில் நான் “டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்” என்ற தலைப்பில் ஆல்பம் ஒன்று போட்டேன். அந்த ஆல்பம் 33 பாடல்களை கொண்டது. இப்போது என்னவென்றால் சிம்போனி நிறுவனம் நான் பாடிய பாடல்களுக்கான பதிப்புரிமையை சட்டவிரோதமாக விற்று உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் சிம்போனியிடம் சேர்ந்து நான் ஒப்பந்தம் போட்டது செல்லுபடியாகாது என்று கூறுகிறார்கள். ஏன்னா, அப்போது எனக்கு 18 வயது ஆகவில்லையாம்.
அப்படியே ஆனாலும் 2001 வரை தான் ஒப்பந்தம் செல்லுபடியாகும். அதனால் தற்போது பாடல் பதிவுகளை விற்கின்றோம் என்று சொல்கிறார்கள். மேலும், சமூக வலைத் தளங்களில் இருந்து என் புகைப்படங்களை எடுத்து பயன்படுத்துகிறார்கள். என்னுடைய பதிப்புரிமை மீறியதற்காக 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், ஒலிப்பதிவுகளை தயாரித்து விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறி உள்ளார். இந்த வழக்கை நீதிபதி அவர்கள் வருகிற 20 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உள்ளார் என்ற தகவல் வெளியானது.