ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசாவை தொடர்ந்து ஜோடி சேரவிருக்கும் மற்றும் ஒரு பிக் பாஸ் பிரபலங்கள்..!

0
553
Harishkalyanraisa

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தானாக தேடி வருகின்றது. ஜூலி தொடங்கி ரைசா வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலமே தற்போது சினிமா வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

Mahathyashika

இதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா இருவரும் ஜோடியாக நடித்த “பியர் பிரேமா காதல்” திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இருவரும் பிஸியான நடிகர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்ற மஹத் மற்றும் யாஷிகா இருவரும் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை இவர்கள் இருவரும் காதலை பரிமாறிக்கொண்டனர் ஆனால், மஹத்திற்கு ஏற்கனவே பிராச்சி என்ற காதலி இருந்ததால் யாஷிகாவின் காதலுக்கு நோ சொன்ன விடயம் பின்னர் நடந்த விடயம் அனைத்தையும் அறிவோம்.

தற்போது யாஷிகாவும் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ள நிலையில் மஹத் மற்றும் யாஷிகாவை வைத்து ஒரு படத்தை எடுக்கலாம் என்று பேச்சு வார்த்தை நடிப்பெற்று வருகிறதாம். ஆனால், இதை பற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும், இதை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.