விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி என்ற நடன நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலம்.இந்த நிகழ்ச்சியில் நடனம் மட்டுமல்ல அவ்வப்போது சில சர்ச்சையான விடயங்களும் நிகழ்ந்து வருகிறது.

அதில் ஒன்று தான் பப்லு மற்றும் சிம்புவின் சண்டை. பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த ஜோடி நிகழ்ச்சியை தற்போது ஜோடி ஃ பன் அன்லிமிடேட் என்ற பெயரில் புதிதாக நடத்தி வருகின்றனர். இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மஹத்தும் ,யாஷிகாவும் நடுவர்களாக இருந்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது அது என்னவென்று நிகழ்ச்சியில் பங்குபெற்ற சில போட்டியாளர்கள் கூறுகையில், ஆடியன்ஸ் தரப்புல சித்ரா – குமரன் ஜோடிக்கு தொடர்ச்சியா அதிகமான மார்க் தந்துட்டு வந்த சூழல்ல, ஒரே வாரத்துல திடீர்னு எப்படி அது தலைகீழா மாறும்?! ஆனா, சில தினங்களுக்கு முன்னாடி அப்படி நடந்திருக்கு. அப்போதான், கொதிச்சுப்போனார் மஹத். உடனே, மத்த மூணு டீம் லீடர்கள், ஏன் சக போட்டியாளர்களேகூட இவங்க ஆட்டத்தை வெகுவா ரசிச்சுப் பாராட்டுகிற சூழல்ல,இவங்களுக்குக் குறைவான மார்க்’னு எப்படிச் சொல்றீங்க’னு நிகழ்ச்சியோட இயக்குநர்கிட்டேயே போய் கேட்டவர், ஒரு கட்டத்துல, `இப்படியெல்லாம் நடந்துச்சுனா, நான் இந்த ஷோவிலிருந்து வெளியேறிடுவேன்’னு கோபமாப் பேசிட்டார்.” என்கிறார்கள்.

இதுகுறித்து மஹத் பிரபல தனியார் பத்திரிகைக்கு அளித்த தொலைபேசி பேட்டியில், என்னோட டீம்ல இருக்கிற சித்ரா – குமரன் ஜோடி தொடர்ந்து சிறப்பான பெர்ஃபாமென்ஸ் தந்துக்கிட்டு வர்றாங்க. சம்பந்தப்பட்ட நிகழ்வு நடந்த அன்னைக்கு, குமரன் அவ்ளோ பிரமாதமா ஆடியிருந்தார். ஷோ பார்க்கிறப்போ, அவரோட திறமை உங்களுக்கும் தெரியவரும். ஆனா, அவருக்கு அதிக மார்க் தரலைங்கிறதுல நான் கொஞ்சம் அப்செட். சித்ரா – குமரன் ஜோடியைவிட சுமாரா ஆடினவங்களுக்கு அதிகமான மார்க்கும், இவங்களுக்குக் கம்மியான மார்க்கும் தரப்பட்டது என்பது என் கருத்து. அதனால, என் கருத்தைப் பதிவு பண்ற சூழல் வரும்போது,

Advertisement

இங்கே ஆட்டத்துக்கு மட்டும் மார்க் தரலை; மற்ற சில விஷயங்களுக்கும் சேர்த்தே மார்க் போடுறாங்கபோல’னு சொன்னேன். மற்ற சில விஷயங்களுக்குனு நான் சொல்றது, போட்டியாளர்களோட பாப்புலாரிட்டி மாதிரியான விஷயங்கள். அதாவது, சில போட்டியாளர்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்காங்க. மதிப்பெண் தரும்போது, இதையெல்லாம்கூட மனசுல வெச்சுதான் தர்றாங்களோனு தோணுது!” என்று கூறியுள்ளார். 

Advertisement
Advertisement