இது உண்மையா ? மகேஷ் பாபுவின் சம்பளம் இத்தனை கோடியா ?

0
3638
Mahesh-babu
- Advertisement -

டோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. தற்போது மகேஷ் பாபு அவர்கள் ‘சரிலேரு நீகேவாரு’ என்ற படத்திற்காக வாங்கிய சம்பளத்தை கேட்டு அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போய் உள்ளார்கள். தெலுங்கு திரை உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. இவர் டோலிவுட்டின் பிரின்சஸ் என்று கூட அழைக்கலாம். மகேஷ் பாபு அவர்கள் தன்னுடைய இள வயதில் தன் தந்தையின் திரைப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் தனது 25 ஆவது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தமிழில் ஸ்பைடர், பிரம்மோற்சவம், செல்வந்தன் போன்று பல படங்களில் நடித்து உள்ளார். தமிழில் எப்படி தளபதி விஜய் மாஸ் ஹீரோவோ அதே போல் தான் தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபு. விஜய் நடித்த வெற்றிப் பெற்ற கில்லி, போக்கிரி போன்ற திரைப் படங்கள் எல்லாம் நடிகர் மகேஷ் பாபு நடித்த தெலுங்கு படங்களின் ரீமேக் தான்.

-விளம்பரம்-
Image result for mahesh babu

- Advertisement -

தற்போது நடிகர் மகேஷ் பாபு அவர்கள் ‘சரிலேரு நீகேவாரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் இவர் ராணுவ வீரராக நடித்து உள்ளார். அதோடு 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை விஜயசாந்தி அவர்களும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். ‘சரிலேரு நீகேவாரு’ என்ற படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கி உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திர பிரசாத், ரோகிணி உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். ரத்தினவேலு என்பவர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து உள்ளார். இந்த படம் ஜனவரி மாதம்11 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கிற்கு வெளியாகும் என்று அதிகாரப் பூர்வமாக படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

இதையும் பாருங்க : சூப்பர் ஸ்டார் கையில் சரக்கு கிளாஸா ? சர்ச்சையை ஏற்படுத்திய பழைய புகைப்படம்.

ஆனால், அதற்கு முன்னதாகவே ரசிகர்கள் எல்லோரும் இந்த படத்தின் கொண்டாடத்தை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள சுதர்சன் என்பவர் 35 எம்.எம். என்ற தியேட்டரில் 81 அடி உயர கட் அவுட் வைத்து இந்த படத்தை கொண்டாடி வருகிறார். மேலும், இந்த படத்தை மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அதில் நம்ப ஹீரோ மகேஷ் பாபு நிறுவனமும் ஒன்று. இதனைத் தொடர்ந்து இந்த படத்திற்காக நடிகர் மகேஷ் பாபு அவர்கள் 42 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Image result for mahesh babu

இதை கேட்டவுடன் டோலிவுட் வட்டாரமே அதிர்ந்து போனது. அதோடு நடிகர் மகேஷ் பாபு அவர்கள் இதுவரை நடித்த படங்களுக்கு வாங்கிய சம்பளத்தை விட இந்த படத்தில் டபுள் மடங்கு வாங்கி உள்ளார் என்று டோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்த அளவுக்கு நடிகர் மகேஷ் பாபு அவர்கள் சம்பளம் வாங்கியது உண்மையா? இல்லையா? என்பதை படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், மகேஷ் பாபு தான் கூற வேண்டும். இது மட்டும் உண்மை என்றால் தெலுங்கு சினிமாவில் அதிக அளவு சம்பளம் வாங்கும் ஹீரோவாக நடிகர் மகேஷ் பாபு தான் என்றும் கூறி வருகிறார்கள்.

Advertisement