சூப்பர் ஸ்டார் கையில் சரக்கு கிளாஸா ? சர்ச்சையை ஏற்படுத்திய பழைய புகைப்படம்.

0
6492
Rajini
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். மேலும், சினிமா திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகளும், படைப்புகளும் எண்ணிலடங்காதவை. ரஜினிகாந்த் அவர்கள் சினிமா துறையில் மட்டும் இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைய புது விஷயங்களை செய்துள்ளார். ரஜினிகாந்த் ஒரு ரியல் ஹீரோ என்பது எல்லோருக்குமே தெரியும். அபூர்வ ரகங்கள் துவங்கி தற்போது வெளியாக இருக்கும் தர்பார் வரை பல ஆண்டுகளாக அசைக்க முடியாத நடிகராக திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிறந்த இவரது இயற்பெயர் சிவாஜி ராவ் காயகவாட். இவரது பெற்றோர்களான ராமோஜி ராவ் காயக்வாடுக்கும்- ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் மராத்தியர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். சூப்பர் ஸ்டாரின் தந்தை ராமோஜி ராவ் கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சி குப்பத்தில் பிறந்தவர். சமீபத்தில் கமலின் உங்கள் நான் விழாவில் பேசிய போது கூட, தான் மிகவும் சாதாரண குடும்பத்தில் இருந்து தான் வந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார் ரஜினி.

இதையும் பாருங்க : நடிகர்களை பற்றி புகழ்ந்து பேச என்ன எதுக்கு பேட்டி எடுக்கிறீங்க. கடுப்பான தெறி பட வில்லன் தீனா.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினியின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் தான். ஆனால், மராட்டியப் பேரரசர் சிவாஜி பேரரசரின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இவருக்கு இந்த பெயர் வைக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டில் தனது தந்தையின் பணிநிறைவிற்குப் பின் சூப்பர் ஸ்டாரின் குடும்பம் பெங்களூர் சென்று அனுமானந்தா நகரில் வீடு கட்டி குடியேறினர். தனது 9 வயதில் தனது தாயை இழந்தார் ரஜினி. அதன் பின்னர் பஸ் கண்டக்டராக இருந்து பின்னர் சினிமாவில் அறிமுகமானார்.

Related image

-விளம்பரம்-

இத்தனை ஆண்டுகாள திரை வாழ்க்கையில் இதுவரை எந்த ஒரு பெரிய பிரச்சனையிலும் சிக்கியது இல்லை. ஆனால்,சமீபத்தில் ரஜினியின் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த புகைப்படத்தில் ரஜினியின் அருகில் சிறுவனாக ஜீவா இருக்கிறார்.மேலும், அந்த புகைப்படத்தில் ரஜினி கையில் ஒரு க்ளாஸையும் வைத்துள்ளார். இதனால் ரஜினி கையில் இருப்பது சரக்கு கிளாஸா என்று ரசிகர்கள் கொஞ்சம் குழம்பி போய் இருக்கிறார்கள். உண்மையில் ரஜினி கையில் இருப்பது என்ன என்பது தான் தெரியவில்லை.

Advertisement