போஸ்டரில் கூட பெண்கள் தான் இதை செய்யணுமா? மாஸ்டர் பட கார்டூன் போஸ்டரில் கடுப்பான மாளவிகா மோகன்.

0
17904
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் நடைபெற்றது. இந்த படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள் என்று சொல்லலாம். இந்த படம் இம்மாதம் வெளியிடுவதாக இருந்தது.

- Advertisement -

ஆனால், நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் படத்தின் தேதியை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாஸ்டர் படத்தின் பாடல்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் படத்தின் பாடல்கள் எல்லாம் டிக் டாக்கில் இதுவரை 1500 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இந்த சாதனையை படக்குழுவினர் மற்றும் நடிகர்கள்,விஜய் ரசிகர்கள் எல்லாம் இணையத்தில் பயங்கரமாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் போட்ட டீவ்ட்டால் கோபமடைந்து டுவிட் செய்த நடிகை மாளவிகா மோகன். விஜய் ரசிகர் ஒருவர் சோசியல் மீடியாவில் தற்போது கொரோனா லாக்டவுனில் மாஸ்டர் படக்குழு வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறது என கார்ட்டூன் புகைப்படத்தை ஷேர் செய்து வெளியிட்டுள்ளார் .

-விளம்பரம்-

இந்த புகைப்படத்தை பார்த்து நடிகை மாளவிகா அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்படி என்ன அந்த புகைப்படத்தில் இருப்பது என்றால் அந்த புகைப்படத்தில் மாஸ்டர் படக்குழு எல்லோரும் ஜாலியாக இருக்க மாளவிகா மற்றும் சமைப்பது போல் கார்டூன் பதிவிட்டு உள்ளார். அது மாளவிகாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பின் இது குறித்து நடிகை மாளவிகா மோகன் டீவ்ட் போட்டு உள்ளார். அதில் அவர் கூறியது,

இந்த ஒரு மூவி வீட்டில் கூட பெண்கள் சமைக்கும் வேலை தான் செய்ய வேண்டுமா? இப்படி பெண்கள் தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என சொல்லும் முறை எப்போது சாகும்? ச்சை என மாளவிகா ட்விட் செய்தார். ஆனால், என்ன நினைத்தார் என்று தெரியவில்லை சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ட்விட்டை நீக்கிவிட்டார். மாளவிகா மோகன் பதிவிட்ட ட்வீட்டின் ஸ்கீரின் ஷாட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி இந்தி, மலையாளம், கன்னட ஆகிய பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகன். இவர் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Advertisement