மும்பையில் நடந்த மாஸ்டர் ப்ரோமோஷன் நிகழ்ச்சி – படு கிளாமர் ஆடையில் சென்றுள்ள மாளவிகா மோகனன்.

0
36692
malavika
- Advertisement -

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் என்று பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனை பலரும் வயதான நடிகை என்று தான் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால், அம்மணியின் போட்டோ ஷூட்டை கண்ட பின்னர் தான் அம்மணி இளம் கவர்ச்சி புயல் என்று பலருக்கும் தெரிந்தது. மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

இதையும் பாருங்க : பாலாவின் உயரம், உடலை பார்த்து தான் ரம்யா Support செய்கிறாரா ? சர்ச்சையை ஏற்படுத்திய கமலின் நேற்றய பேச்சு. வீடியோ இதோ.

- Advertisement -

கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம்இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார் மாளவிகா. ஆனால், சமூக வலைதளத்தில் இவரது கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருந்து வருகிறது. தற்போது இளைய தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடிகை மாளவிகா மோகனன் படு கவர்ச்சியான உடையில் சென்றுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement