பாலாவின் உயரம், உடலை பார்த்து தான் ரம்யா Support செய்கிறாரா ? சர்ச்சையை ஏற்படுத்திய கமலின் நேற்றய பேச்சு. வீடியோ இதோ.

0
35269
ramya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசன் 13 வாரங்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ரம்யா பாண்டியனும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பல ஆர்மி எல்லாம் இருந்தது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் இவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. அதிலும் ஆரி விஷயத்தில் இவர் பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்று பலரும் இவரை குறை சொல்லி வருகின்றனர்.

-விளம்பரம்-

இதனாலேயே ஆரியின் ரசிகர்கள் இவரை நரிப்பாண்டியன் என்றும் விஷம் என்றும் கூறி வருகின்றனர். ரம்யா பாண்டியன் சகோதரர் கூட ஆரி ரசிகர்கள் தன்னுடைய அக்காவை சமூக வலைதளத்தில் திட்டுவதை பார்த்து தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் நடிகர் கமல், பாலாஜியை வறுத்தெடுத்து போல ரம்யா பாண்டியனையும் வறுத்தெடுத்தார். இது நாள் வரை எப்போதும் எந்த பிரச்சனை வந்தாலும் சிரித்த முகத்துடன் இருப்பார் ரம்யா.

- Advertisement -

மேலும், மற்றவர்கள் சண்டை போடும் போதும், சோகமாக பேசும்போது கூட ரம்யா பல முறை சிரித்து இருக்கிறார். கேட்டால் இது தான் என் சுபாவம் Manufacturing Defect என்று கூறுவார். ஆனால், நேற்றய நிகழ்ச்சியில் ரம்யாவிடம் இந்த Manufacturing Defect காணாமல் போய்விட்டது. நேற்றய நிகழ்ச்சியில் கமல், பாலா மற்றும் ஆரி சண்டை குறித்து பஞ்சாயத்து செய்து கொண்டு இருக்கும் போது ரம்யாவிடம் ஆரியின் குறைகளை பற்றி கேட்டதற்கு அவர் 90 நாட்கள் போறிங்காக தான் எனக்கு தெரிகிறார். அவர் எப்போதும் வீட்டில் நெகட்டிவிட்டியை தான் பரப்புகிறார் என்று கூறிஇருந்தார்.

ஆனால், ஆரி விஷயத்தில் ரம்யா பாரபட்சம் காட்டுகிறார் என்று சுட்டிக்காட்டிய கமல்,ரம்யா பாலாஜியை முதலில் பேச விட்டுவிடுகிறார் இந்தக் கருத்து வழிபடும்போது சரி சரி என்று சொல்லி பாலாஜி போய் கூட்டி சென்று விடுகிறார் அது ஒரு ஞாயமான விவாதம் கிடையாது. உங்களுக்கு அவர் மீது ஒரு வெறுப்பும் இருக்கலாம். ஆரி சண்டை போடுகிறார் என்று சொன்னால் அதை பாலாஜியும் தானே செய்கிறார். நீங்கள் ஒரு பக்கம் மட்டும் தேவையில்லாமல் நின்று உங்களுடைய விளையாட்டை விளையாடாமல் இருக்கிறீர்கள். நியாயமான கருத்தை கருத்தை எடுத்து வைத்தால் அனைவருக்கும் புரியும் என்று கமல் கூற இதெற்கெல்லாம் பதில் பேச முடியாமல் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார் ரம்யா.

-விளம்பரம்-

அதே போல ஆரியிடம் பேசும் போது, மற்றவர்கள் உங்கள் மீது சொன்ன குறையை சரி செய்யப்பாருங்கள். ரம்யா உங்களை 90 நாட்களாக போரிங் என்கிறார். அது என்ன போரிங் என்பதை பாருங்க. ஸ்வாரசியாக இருக்க என்ன பண்ணலாம். நீங்க பாலாஜி உயரம் கிடையாது, அவர் பாடி பேரசு, பைஸப்சும் பெருசு அதை பாராட்டிவிட்டு அதை விட உயர வேறு என்ன வழி என்பதை யோசிங்க என்று கூறி இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ரம்யா, பாலாஜியின் உயரம் மற்றும் உடல் அமைப்பை பார்த்து தான் அவருக்கு ஆதரவாக பேசுகிறாரா ? எப்படி கமல் ஒரு பெண்ணை இப்படி பேசலாம் என்று சர்ச்சையை ஏற்படுத்தி பல்வேறு கமன்ட்களை செய்து வருகின்றனர்.

Advertisement