அஜித்தை போல பார்முலா பைக்கை ஓட்டி அசத்திய விஜய் பட நடிகை. வைரலாகும் வீடியோ.

0
1202
malavika
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். சினிமாவையும் தாண்டி இவருக்கு பைக், ரேஸ் கார் ரேஸ் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். மேலும், இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கூட கலந்து கொண்டு இருக்கிறார். இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடும். இந்த நிலையில் அஜித்தைபோன்று ரேஸ் டிராக்கில் ஸ்போர்ட்ஸ் பைக்கை ஓட்டி அசத்தியிருக்கிறார் மாஸ்டர் பட நடிகை, வேறு யாருமில்லை மாளவிகா மோகனன் தான்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/B_NCgqsA6Ca/

தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி இந்தி, மலையாளம், கன்னட ஆகிய பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகன். இவர் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

- Advertisement -

தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார்.தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து உள்ளார். மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கல்லூரி மாணவியாக நடித்து உள்ளார். இந்த படத்தில் விஜய் அவர்கள் பேராசிரியாக நடித்து உள்ளார்.

https://www.instagram.com/p/B-MsToHA2e6/

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன் அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் ஃபார்முலா ரேஸ் டிராக்கில் இந்திய பைக் ரேஸ் வீரர்களுடன் அதிவேக பைக்கை ஓட்டி இருக்கிறார் அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் ரசிகர்கள் பலரும் அடைந்து உள்ளார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இது ஒரு புறம் இருக்க மாஸ்டர் படத்திற்காக நடிகை மாளவிகா ஒரு சில பயிற்சிகளை மேற்கொண்டு இருந்ததாக ஏற்கனவே தகவல் வந்தது. இவர் தன்னுடைய கதாபாத்திரத்துக்காக ’parkour’ என்ற கலையை பயிற்சி எடுத்துவந்தாராம். பிரான்ஸ் நாட்டில் தான் முதலில் தோன்றியது இந்த parkour கலை. இந்த பயிற்சியின் மூலம் இவர் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிக்கத்துள்ளதாகவும், விஜய் சேதுபதியுடன் மோதும் ஆக்சன் காட்சிகளில் கூட நடித்துள்ளதாகவும் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement