திலீப் – பாவனா கடத்தல் வழக்கு, ரம்யா நம்பீசனிடம் விசாரணை.

0
2156
dileep
- Advertisement -

மலையாள திரை உலகில் பிரபலமான நடிகர் திலீப். நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாள என பல மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இவரை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் படம் பிடித்த சம்பவம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பிறகு இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர் பிரபல மலையாள நடிகர் திலீப் என்று தெரிய வந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் திலீப் அவர்கள் நடிகை பாவனாவை கூலிப் படையை விட்டு ஏவிய புகாரில் கைது ஆனார். இதற்காக இவர் 85 நாட்கள் சிறையில் இதற்காக தற்போது தான் நடிகர் திலீப் ஜாமீனில் இருந்து வெளியே வந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 136 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது. இதை தொடர்ந்து தினமும் சாட்சிகள் வாக்குமூலம் அளித்து வந்தனர். ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட சில நடிகைகள் திலீப்புக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக கூறப்பட்டது.

- Advertisement -

அதோடு நடிகர் லால், இடைவேளை பாபு ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகமாகி கொண்டே செல்கிறது. கொரோனாவின் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

இதனால் நடிகர் திலீப்பின் வழக்கு விசாரணையை கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி நிறுத்தி வைத்தனர். இந்நிலையில் தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கி உள்ளது. இதனால் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரிடம் இந்த வழக்கு தொடர்பாக குறுக்கு விசாரணை நடக்கிறது.

-விளம்பரம்-
Advertisement