முடியை வெட்டியதால் தடை வரை சென்ற இளம் நடிகர். 7 கோடியை திருப்பி தரவும் அறிவிப்பு.

0
25530
Shane-nigam
- Advertisement -

மலையாள நடிகர் ஷேன் நிகம் அவர்களின் தலைமுடி பிரச்சனை சோசியல் மீடியாவில் கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த பிரச்சனை தற்போது மலையாள சினிமாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மலையாள மொழியில் “கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க், கிஸ்மத்” என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் ஷேன் நிகம். தற்போது இவர் “வெயில், குர்பானி” ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வெயில் படத்தில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நீண்ட முடி வளர்க்க வேண்டும் என இயக்குனர் நடிகர் ஷேன் நிகம் இடம் கூறியிருந்தார். ஆனால், நடிகர் ஷேன் நிகம் அவர்கள் அதை மீறி சமீபத்தில் தன்னுடைய நீண்ட முடியை வெட்டி உள்ளார். அதோடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வந்த நிலையில் நடிகர் ஷேன் நிகனின் செயலை குறித்து தயாரிப்பாளர் சோபி ஜார்ஜ் மற்றும் வெயில் இயக்குனர் சரத் ஆகியோர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for shane nigam

- Advertisement -

மேலும், இந்த படத்தில் நடிக்க நடிகர் ஷேனுக்கு 30 லட்சம் சம்பளம் பேசப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்கியது. அதையெல்லாம் மீறி இவர் 40 லட்சம் கேட்டதாகவும், இதை தர முடியாது என்று மறுத்ததனால் தான் நடிகர் ஷேன் முடியை வெட்டி படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார் என தயாரிப்பாளர் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது. நடிகர் ஷேன் அவர்கள் தயாரிப்பாளர் தனக்கு தற்கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று பேஸ்புக்கில் வெளியிட்டு பயங்கர பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி புகார்களை எழுப்பிய வண்ணம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள். இப்படி போய்க் கொண்டிருந்த நிலையில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கம் முயற்சியில் இவர்கள் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை முடியை வெட்ட மாட்டேன் என நடிகர் ஷேன் உறுதி அளித்திருந்தார். அதோடு 15ஆம் தேதி முதல் படப்பிடிப்பில் நடிகர் ஷேன் கலந்து கொள்வதாக சொன்னார். ஆனால், நடிகர் ஷேன் சொன்னபடி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஏன் என்று கேட்டதற்கு 25ம் தேதி கலந்து கொள்கிறேன் என கூறினார். இப்படி சொன்ன நிலையில் சமீபத்தில் தன்னுடைய முடியை வெட்டி அதை புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். நான் இதை ஒரு போராட்டமாக செய்தேன் எனவும் நடிகர் ஷேன் கூறியிருந்தார். இவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியான உடன் தயாரிப்பாளர் சங்கத்தில் வெயில் படம் சார்பாக புகார் அளித்திருந்தார்கள்.

-விளம்பரம்-
Image result for shane nigam

அதை எடுத்து அவசர கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தயாரிப்பாளர்கள் ஆலோசனை செய்தனர். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள் கூறியது, நடிகர் ஷேன் படங்களுக்கு ஒத்துழைப்பு இனி கொடுக்க மாட்டோம். அவரை வைத்து எடுக்க இருந்த வெயில், குர்பானி மற்றும் உல்லாசம் ஆகிய படங்களில் இருந்து நீக்கி விட்டோம். இதுவரை அவரால் ஏற்பட்ட நஷ்டம் 7 கோடி ரூபாயை திருப்பி தரவேண்டும் என அதிரடியாக அறிவித்து அவர்கள். இது குறித்து தன்னுடைய கருத்தை கேட்காமல் ஒருதலைபட்சமாக முடிவு எடுத்ததற்கு நடிகர் ஷேன் புகார் அளித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு புறம் மலையாள சினிமா இளம் நடிகர்கள் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்று பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் தயாரிப்பாளர் ஜோன்.

ஷேன் நிகம் புதிய ஹேர்ஸ்டைல்
ஷேன் நிகம் முடியை வெட்டிய பின்னர்

இவரின் இந்த செயல் நடிகர் ஷேன் மீது குறி வைத்து குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதற்கு நடிகர் ஷேன் மற்றும் அவரது தாய் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த மலையாளத் திரையுலகிலும் இந்த சம்பவம் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சனையில் சில பேர் நடிகர் சேனுக்கு ஆதரவாகவும், சில பேர் தயாரிப்பாளருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் மலையாள சினிமாவுலகில் சமீப காலமாகவே பல சர்ச்சைகள் வந்து கொண்டே தான் உள்ளது.

Advertisement