உண்மையிலேயே விஜய் சிறந்த நடிகரும் இல்ல, சூப்பர் ஸ்டாரும் இல்ல – சீனியர் மலையாள நடிகர்.

0
12740
- Advertisement -

மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகர் ஒருவர் தமிழ் சினிமாவின் இளையதளபதி விஜய் ஒரு சிறந்த நடிகர் இல்லை என்று கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் இளையதளபதி விஜய். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். மேலும், இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. அதோடு ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்து சோசியல் மீடியாவில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில் தளபதி விஜய் சிறந்த நடிகர் அல்ல என்று மலையாள நடிகர் குறிப்பிட்டிருக்கிறார். மலையாள திரை உலகத்தின் மூத்த நடிகர்களில் ஒருவர் தான் சித்திக். இவர் சமீபத்தில் மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில் சித்திக் அவர்கள் கூறியிருப்பது, மலையாள திரையுலகம் நிறையவே அதிஷ்டம் செய்துள்ளது. ஏனென்றால் மம்முட்டி, மோகன்லால் போன்ற மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்கள் இங்கு தான் உள்ளார்கள். மற்ற திரை உலகத்தில் கூட இந்த மாதிரி நடிகர்கள் இல்லை. தமிழ் திரைப்படத்துறையில் கொஞ்சம் வித்தியாசமான நிலைமை தான். தமிழகத்தில் மக்கள் விஜய்யை சூப்பர் ஸ்டார், பெரிய நடிகர் என்று போற்றுகிறார்கள்.

- Advertisement -

ஆனால், உண்மையிலேயே விஜய் சிறந்த நடிகரே இல்லை. அவருக்கு வழங்கப்பட்ட சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் தான் அவரை அந்த இடத்தில் வைத்து இருக்கிறது. அதேபோல் தமிழ் சினிமாவில் கமலஹாசனை சிறந்த நடிகர் மற்றும் சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாமே தவிர மற்ற நடிகர்களை அதுவும் விஜய்யை சூப்பர் ஸ்டார், சிறந்த நடிகர் சொல்வதெல்லாம் சரி இல்லை என்று நடிகர் சித்திக் கூறுகிறார்.

இதனை தொடர்ந்து மலையாள சினிமா உலகில் இது பற்றி மற்றொரு மலையாள நடிகரான ஹரிஷ் பெராடி கூறியது, விஜய் சிறந்த நடிகர் மட்டுமல்ல தற்போதைய தலைமுறைக்கு சூப்பர் ஸ்டார் நடிகரும் அவர் தான். அவர் ஒரு சிறந்த மனிதரும் கூட என்று சொல்லியிருக்கிறார். இப்படி மலையாள சினிமா உலகில் விஜய்யை பற்றி தான் பல கருத்துக்களும் சர்ச்சைகளும் எழுந்தவண்ணம் உள்ளன. இது தற்போது சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement