ஆளே அடையாளம் தெரியாமல் அளவிற்கு மாறிப் போன மலையாள நடிகர் சீனிவாசன் உடைய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மலையாள சினிமா உலகில் மூத்த நடிகராக திகழ்ந்தவர் சீனிவாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பன்முகத் தன்மை கொண்டு திகழ்ந்தவர். இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
குறிப்பாக, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் சேர்ந்து இவர் பல படங்கள் நடித்திருக்கிறார். அந்த படங்களெல்லாம் மாபெரும் வெற்றியும் பெற்றிருக்கிறது. மேலும், இவருடைய பல கதைகள் பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படங்களாக மாற்றப்பட்டும் இருக்கிறது. பெரும்பாலும், இவர் படங்களில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் தான் நடித்திருக்கிறார்.
சீனிவாசன் திரைப்பயணம்:
இவருடைய நடிப்பு திறமைக்காக தேசிய விருது, மாநில விருது என பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.
இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவருடைய மகன் தான் வினித் ஸ்ரீனிவாசன். இவரும் தன்னுடைய தந்தையை போன்று சினிமாவில் பல துறைகளில் ஜொலித்துக் கொண்டு வருகிறார். சில ஆண்டுகளாகவே சீனிவாசனின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். வயது மூப்பின் காரணமாக சீனிவாசனுக்கு சமீபத்தில் கூட பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சீனிவாசன் உடல்நிலை:
அதற்குப் பிறகு இவர் படங்களில் நடிக்கவில்லை. அதற்கு முன்னே அவர் உடலில் பல பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அடையாளம் தெரியாத அளவிற்கு சீனிவாசன் மாறி இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது நடிகை ஸ்மினு சிஜோ என்பவர் சீனிவாசனை அவருடைய இல்லத்திற்கு சென்று சந்தித்து இருக்கிறார்.
நடிகை ஸ்மினு சிஜோ கூறியது:
அப்போது அவர்களுடைய சந்திப்பு குறித்து நடிகை ஸ்மினு சிஜோ கூறியிருப்பது, சீனு சேட்டன் நலமுற்று திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனைசெய்த அனைவருக்குமே நன்றி. சிறு சிறு உடல் உபாதைகள் மட்டுமே அவருக்கு இருக்கிறது. அவர் பூரண நலமுடன் இருக்கிறார் என்று கூறி அவருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் சீனிவாசன் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி போய் இருக்கிறார்.