கேரளாவில் பெருகி வரும் போட்டோ ஷூட் பேஷன் – கோவிலில் எல்லை மீறிய நடிகை கைது. என்ன செய்துள்ளார் பாருங்க.

0
2666
Nimisha

சமீபகாலமாகவே சீரியல் பிரபலங்கள் மற்றும் சோசியல் மீடியா பிரபலங்கள் பலர் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கேரளாவில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் படகில் போட்டோ ஷூட் நடத்தியதற்காக அவரை கைது செய்துள்ளார்கள். தற்போது இந்த நிகழ்வு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த நடிகை மீது பொதுமக்கள் பல கடுமையான விமர்சனங்களும், கொலை மிரட்டல்களும் விடுவதாக கூறப்படுகிறது. கேரளாவில் திருமண விழாக்கள் முதற்கொண்டு குடும்ப விழாக்கள், கோயில் விழாக்கள் என அனைத்தையும் ஃபோட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சில போட்டோ சூட் சர்ச்சைக்குரிய வகையில் அமைந்தது. பிரபல சீரியல் நடிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பிரபலமாக வலம் வருபவர் நடிகை நிமிஷா பிஜோ. இவர் தனது நண்பர் உண்ணி என்பவருடன் இணைந்து சில தினங்களுக்கு முன்பு பள்ளியோட்டம் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். இதற்காக அவர் பாம்பு போல் நீண்ட வடிவில் இருக்கும் கேரளா கப்பல் மீது நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.

- Advertisement -

கேரளாவில் உள்ள பல கோயில்களுக்கு நீண்ட பாம்பு வடிவில் கப்பல்கள் சொந்தமாக இருக்கும். இந்த கப்பல்களை விழாக்காலங்களில் தான் பயன்படுத்துவார்கள். சில நேரங்களில் இந்த கப்பல்களில் போட்டிகள் கூட நடக்கும். அந்த வகையில் கோயிலுக்கு சொந்தமான கப்பல் ஒன்றில் தான் நடிகை நிமிஷா போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். இந்த கப்பல் பத்தினம்திட்டாவிலுள்ள பாம்பை ஆற்றில் சாமி ஊர்வலத்தின்போது பயன்படுத்தப்படுவதால் இத்தனை பிரசித்திபெற்ற புனிதப் பொருளாக தான் மக்கள் கருதி வருகின்றனர். மேலும் , அரன்முலா கோயிலுக்கு மட்டும் இதுபோன்ற 52 கப்பல்கள் சொந்தமாக உள்ளன. அதுமட்டுமில்லாமல் இந்த கப்பலில் ஏற வேண்டும் என்றால் தனி பூஜை செய்துவிட்டு கேரள வேட்டியையும் முண்டையும் அணிந்து கொண்டுதான் மக்கள் ஏறுவார்களாம்.

அதோடு இந்த கப்பல் பாம்புகளின் விலை ஒரு கோடி ரூபாய்க்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. பலா மரத்தால் செய்யப்படும் இந்தக் கப்பலை மக்கள் கோவிலுக்கு சொந்தமான புனித இடத்தை போன்று தான் மதிக்கின்றனர். இந்த கப்பலில் நடிகை நிமிஷா அவர்கள் தற்போது ஜீன்ஸ் மற்றும் ஷூ போட்டுக்கொண்டு போட்டோ எடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் பரவியதை தொடர்ந்து பலரும் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் கோவில் தேவஸ்தானம் நடிகை மீது புகார் அளித்த நிலையில் போலீசார் நடிகை நிமிஷாவை கைது செய்துள்ளனர். இதுகுறித்து நடிகை கூறியது, இந்த கப்பலுக்கு இவ்வளவு புனிதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இதற்கு முன்பு நான் இதைக் கேள்விப்பட்டதும் இல்லை. நான் போட்டோ சூட் எடுக்கும் போது பலரும் அங்கு பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். யாரும் என்னை தடுக்கவில்லை. நான் தெரியாமல் இந்த தவறை செய்து விட்டேன். இனி மேல் எந்த தவறும் நடக்காது எனக்கு ஜாமீன் கொடுங்கள் என்று நீதிமன்றத்திடம் முறையிட்டு இருக்கிறார்.

Advertisement