ஹீரோக்களுடன் ஒத்துழைக்கவில்லை என்றால் படத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்று நடிகை மல்லிகா ஷெராவத் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே அட்ஜஸ்மென்ட் விஷயம் நடைபெற்று வருகிறது. ஆனால், சமீப காலமாக தான் இந்த பிரச்சனை வெளி உலகத்திற்கு தெரிய வந்திருக்கிறது. சோசியல் மீடியா மூலம் நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேட்டி எல்லாம் கொடுத்து இருக்கிறார்கள்.

அதிலும் சில ஆண்டுகளாக பிரபல நடிகைகள் முதல் சாதாரண பெண் மேக்கப் ஆர்டிஸ்ட் வரையன பலருமே அட்ஜஸ்ட்மெண்டால் பாதிக்கப்பட்டதை குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பட வாய்ப்புகளும் பறிப் போய் இருக்கிறது. இதனால் திறமையான பல பேருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு
நடந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து தான் இங்கு பார்க்க போகிறோம்.

Advertisement

மல்லிகா ஷெராவத் குறித்த தகவல்:

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக இருப்பவர் மல்லிகா ஷெராவத். இவர் நடிகை மட்டும் இல்லாமல் மாடல் அழகியும் ஆவார். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த “க்வாஹிஷ்” என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல ஹிந்தி படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவர் நடிப்பில் வெளிவந்த மர்டர் படம் மிகபெரிய அளவில் வெற்றி பெற்றது.

மல்லிகா ஷெராவத் திரைப்பயணம்:

மேலும், தமிழில் இவர் கமலஹாசன் நடிப்பில் வெளியாகியிருந்த தசாவதாரம் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் 2008 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதற்கு பிறகு தமிழில் இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. அதோடு இவர் இந்தி, தமிழ் தவிர சீன மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 21 ஆண்டுகளாக இவர் வெற்றிகரமாக பாலிவுட்டில்
நடித்துக் கொண்டு இருக்கிறார்.

Advertisement

மல்லிகா ஷெராவத் பேட்டி:

இந்த நிலையில் சினிமாவில் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து மல்லிகா ஷெராவத் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர், பொதுவாக சினிமாவில் படத்தில் நடிக்கும் ஹீரோ சொல்வதை செய்யாவிட்டால் படத்தில் இருந்து விலக வேண்டிய சூழல்தான் இருக்கிறது. இது பாலிவுட் சினிமாவில் அதிகமாக இருக்கிறது. அவர்கள் நடிகைகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள். பலரும் அதற்கு ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால், என்னால் ஒருபோதும் அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு செய்ய முடியாது.

Advertisement

அட்ஜஸ்ட்மென்ட் குறித்து சொன்னது:

மேலும், ஒரு படத்தில் நான் நடிக்கிறேன் என்றால் அந்த படத்தினுடைய ஹீரோ என்னை இரவு 3 மணிக்கு வீட்டிற்கு வர சொல்லி அழைத்தாலும் நான் போக வேண்டும். இல்லை என்றால் என்னை அந்த படத்தில் இருந்து நீக்கி விடுவார்கள். இதுதான் அங்கு நடக்கும் மோசமான நிலை. இது என்னை அதிக அளவில் பாதித்திருக்கிறது. ஹீரோக்களின் ஆசைக்கு நான் ஒத்துப் போகாததால் நிறைய பட வாய்ப்புகள் எல்லாம் தவற விட்டிருக்கிறேன். 65 கதைகளில் தேர்வானேன். ஆனால், ஹீரோக்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றவுடன் என்னை விலக்கி விட்டார்கள். அந்த 65 கதைகளில் ஒரு படத்தில் கூட நான் நடிக்கவில்லை என்று எமோஷனலாக பேசி இருந்தார்.

Advertisement