பலரது பிளே லிஸ்டில் இணைந்த ‘மல்லிப்பூ’ பாடலை பாடிய இவர் யார் தெரியுமா ? ஒரு சுவாரசிய தகவல்.

0
832
mallipoo
- Advertisement -

வெந்து தணிந்தது காடு படத்தின் மல்லிப்பூ பாடல் குறித்து பாடகி மதுஸ்ரீ அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியிருக்கிறது. இந்தபடத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறது. படத்தில் சிம்பு அவர்கள் தன்னுடைய அம்மா, தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். இவர் வயகாட்டில் வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை பாதுகாத்து வருகிறார். அப்போது ஒரு நாள் சிம்புவுக்கு விபத்து ஏற்படுகிறது. இதை நினைத்து அவருடைய தாய் பயப்படுகிறார்.

- Advertisement -

வெந்து தணிந்தது காடு படம்:

பின் சிம்பு மும்பைக்கு செல்கிறார். அங்கு பரோட்டா கடையில் வேலை செய்கிறார். எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் கும்பலில் சிம்பு சிக்கி கொள்கிறார். இறுதியில் சிம்புவின் வாழ்க்கை என்ன ஆனது? சிம்புவின் நிலைமை என்ன? சொந்த ஊருக்கே சிம்பு திரும்பினாரா? என்பது தான் படத்தின் மீதி. காதல், கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

மல்லிப்பூ பாடல் குறித்த தகவல்:

படத்தில் ஏ ஆர் ரகுமான் இசைகளும் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் படத்தில் இடம்பெற்ற மல்லி பூ பாடல் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த பாடலை பாடகி மதுஸ்ரீ பாடியிருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில் மருதாணி, மயிலிறகே மயிலிறகே, கண்ணன் வரும் வேளை போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இவர் பாடிய மல்லிப்பூ பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த பாடல் உருவான விதம் குறித்து பிரபல சேனலிடம் பாடகி மதுஸ்ரீ பேட்டி அளித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பாடகி மதுஸ்ரீ அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருந்தது, ஏ.ஆர்.ரகுமான் சார் தான் எனக்கு போன் செய்து இந்த பாடலைப் பற்றி சொல்லியிருந்தார். இந்த பாடலுக்காக அவர் என்னை அழைத்திருந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இந்த பாடலை பாடுவது சுலபம் அல்ல. பல ரிதமிக் ஏற்றங்கள் இருந்தது. ஆனால், ரஹ்மான் சார் எங்களுக்கு சுதந்திரம் கொடுத்தார். அந்த சுதந்திரம் நமக்கு செய்ய தோன்றியதை செய்ய உதவியாக இருந்தது. நல்லா வரும் பாடுங்கள் என்று ரகுமான் சார் சொன்னார். பாடல் ஆசிரியர் தாமரை அற்புதமாக பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் குறித்து சொன்னது:

எனக்கு தமிழ் தெரியாது. தாமரை எனக்கு தெளிவாக விளக்கியிருந்தார். பாடலை பாடிய பிறகு நான் முதல் முறையாக கேட்கும் போது இது நிச்சயம் பிளாக்பஸ்டர் ஆகும் என நினைத்தேன். நான் நினைத்தது போலவே இந்த பாடல் பிளாக் பாஸ்டர் பாடலாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. இது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் பாடுவதற்கு தொடங்கி இருக்கிறேன். தமிழ் மக்கள் அதிக அளவில் மெலோடி பாடல்களை விரும்பி கேட்கின்றனர். இப்போது மக்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறேன். அந்த பாராட்டுகள் எனக்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல ஊக்கமளிக்கிறது என்று புன்னகையுடன் மதுஸ்ரீ கூறியிருக்கிறார்.

Advertisement