டெஸ்ட் ஷூட்டை எல்லாம் முடித்துவிட்டு இருவர் படத்தில்கருணாநிதி ரோலில் நடிக்க மறுத்துள்ள மம்மூட்டி – இதான் காரணமாம்.

0
757
mamooty
- Advertisement -

தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளமா! என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு, இயக்குநர் மணிரத்னமிற்கு ரசிகர்கள் உள்ளனர். படத்தை தியேட்டரில் பார்த்து ரசிக்கும் மக்கள் மட்டுமின்றி திரையுலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குநர்களுக்கும் இவர் ஒரு குருநாதர் போல் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களில் பலரும் இயக்குநர் மணிரத்னமின் ரசிகர்களாக இருக்கின்றனர். இவர் வித்யாசமான கதைகளை திரை உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர்.

-விளம்பரம்-

1983-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளி வந்த ‘பல்லவி அணு பல்லவி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருந்தார் மணிரத்னம். இதனைத் தொடர்ந்து தமிழில் ‘உணரு’ என்ற படத்தை இயக்கி இருந்தார் மணிரத்னம். பிறகு இவர் இதய கோயில், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களை இயக்கிய மணி சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

- Advertisement -

இருவர் :

மணிரத்தினம் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் மாஸ்டர் பீஸ் என்று சொல்லக்கூடிய படம் தான் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான “இருவர்” திரைப்படம். இப்படம் இந்திய திரையுலம் அது வரையில் காணாத ஒரு படம் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு மிகச் சிறந்த திரைப்படமாக கருதப்பட்டது. அதோடு இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்து குறிப்பிடதக்கது. தேசிய விருது கொடுக்கும் அளவிற்கு என்ன இப்படத்தின் கதை என்றால் அங்கேதான் பெரிய ஆச்சரியமே இருக்கிறது.

கதாபாத்திரங்கள் :

ஏனெற்றால் இந்த கதை தமிழ் நாட்டை பல ஆண்டுகள் ஆண்ட எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெ.ஜெயலலிதா என மூன்று பெரும் தலைவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படத்தை இயக்குன மணிரத்தினம் இயக்க மோகன்லால், பிரகாஷ்ராஜ், தபு, ஐஸ்வர்யா ராய், கௌதமி, டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, நாசர் என பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

-விளம்பரம்-

தமிழ்செல்வன் கதாபாத்திரத்தில் மம்மூட்டி :

அதோடு இப்படத்தின் கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டால், எம்.ஜி,ஆராக ஆனந்தன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மோகன்லால் அவர்களும், மு.கருணாநிதியாக தமிழ்செல்வன் கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஸ்ராஜூம் நடித்திருந்தனர். ஆனால் இயக்குனர் மணிரத்தினம் இரண்டு பெரும் மலையாள நடிகர்களை ஒரே திரைப்படத்தில் காட்ட விரும்பியிருக்கிறார். அதனால் கருணாநிதி கதாபாத்திரமாக நடிக்க மலையாள நடிகர் மம்மூட்டி அவர்களை தேர்வு செய்திருக்கிறார்.

வாய்ப்பை மறுத்த மம்மூட்டி :

ஆனால், இருவர் படத்தில் தமிழ்செல்வன் கதாபாத்திரம் தூய தமிழில் பேசவேண்டும் என்பதினால், தனக்கு தமிழ் சரளமாக வந்தாலும் பெரும் தமிழ் கலைஞர்களால் எழுதப்பட்ட வசனத்தை பேசுவதற்கு சிரமமாக இருந்த காரணத்தினால் அந்த வசனங்களுக்கு தன்னால் நியாயம் சேர்க்க முடியாது என அந்த படத்தில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார் நடிகர் மம்மூட்டி. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்செல்வன் கதாபாத்திரத்திற்கு புதிய நடிகரை தேடும் போது வந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நடித்த பிரகாஷ்ராஜூக்கு தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது .

Advertisement