சுஜித்தை காப்பற்ற போராடுவதை கிண்டல் செய்த நபர், இப்படியும் ஒருவர் இருப்பாரா ?

0
72993
sujith
- Advertisement -

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். மேலும்,இந்த கோர சம்பவம் கடந்த 3 நாட்களாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை மாலை 5. 40 மணி அளவுக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக 85 அடி ஆழத்திற்கு சென்று விட்டது குழந்தை. ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையை மீட்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள் அரசாங்கமும்,மக்களும். ஆனால், எல்லா முயற்சிகளும் தோல்வியில் தான் போய் முடிகிறது. இந்நிலையில் தற்போது குழந்தையை மீட்க ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-
Image result for sujith"

அது ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் போல் ஒரு குழியைத் தோண்டி அதன் வழியாக குழந்தையை மீட்கலாம் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து என்எல்சி, ஒஎன்ஜிசி மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழி தோண்டி சுரங்கம் போல் செய்து கொண்டு வருகின்றார்கள். ஆனால், ஆழ்துளை கிணறு பகுதியில் குழி தோண்டி செல்லும்போது அங்கு பாறைகள் அதிகமாக இருப்பதால் சுரங்கப் பாதையை ஏற்படுத்துவதில் கொஞ்சம் தாமதமாகிறது என தெரியவந்துள்ளது. மேலும், குழந்தையை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்று மக்களும், அரசாங்கமும் போராடி வருகின்றனர். அரசுகள் ஆழ்துளை கிணறு சம்பந்தமாக எவ்வளவு சட்டங்கள் கொண்டு வந்தாலும், வருடம் வருடம் குழந்தைகள் ஆழ்துளை கிணறுக்குள் மாட்டி கொள்ளும் பிரச்சனைகள் வந்தாலும் மக்களிடையே இன்னும் வரை விழிப்புர்ணவு ஏற்படவில்லை. ஆழ்துளை கிணறு குறித்து நாளுக்கு நாள் பிரச்சனை வந்து கொண்டு தான் உள்ளதே தவிர குறைந்த பாடுஇல்லை. அறம் என்ற படம்மூலம்,விழிப்புணர்வு கொண்டு வந்தாலும் மக்கள் கவன குறைவாக தான் செயல்படுகிறார்கள்.

- Advertisement -

மேலும், குழந்தை மூச்சு விடுவதற்கு oxygen மற்றும் குழந்தை பயமில்லாமல் இருப்பதற்காக உபகரன்கள் எல்லாம் செய்து வருகிறார்கள். நேற்று வரை வரை குழந்தை மூச்சு விட்டுக் கொண்டு தான் இருக்கின்றது என தகவலையும் தெரிவித்துள்ளார்கள். ஆனால்,தற்போது குழந்தை நிலவரம் கொஞ்சம் கஷ்டம் என்று கூறுகிறார்கள். இதனை தொடர்ந்து ‘மாநில ஹெல்த் மற்றும் ஃபேமிலி வெல்பேர் மினிஸ்டர் விஜய பாஸ்கர் அன்று டூரிஸ்ட் மினிஸ்டர் வெல்லமண்டி நடராஜன்’ அவர்களும் சேர்ந்து குழந்தையை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வருகின்றனர். முதலில் ஆயில் கார்ப்பரேஷன் உபயோகப்படுத்தும் எந்திரங்களை கொண்டு 35 அடி தோன்றினார்கள். ஆனால் ,தோண்ட தோண்ட குழந்தையும் அதிக அடி ஆடியில் சென்றது. இப்படி தமிழகம் பரபரப்பாக சோகத்தில் மூழ்கியிருக்கும் போது நெட்டிசன் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியது,’அடுத்து என்ன? பாப்பாரப்பட்டியில் 3 வயது சிறுவன் ஒரு ரூபாய் காயினைமுழுங்கி தொண்டையில் சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறான்.

-விளம்பரம்-

அமைச்சர் விஜய பாஸ்கரும் மொத்த அமைச்சரவையும் விரைந்து சென்று சிறுவனை காப்பாற்ற வேண்டும் வேண்டியது தானே’ என்று அரசாங்கத்தையும் ,மக்களையும் கிண்டல் , கேலி செய்யும் விதமாக அவருடைய கருத்து இருந்தது. இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் ‘உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரம் செய்யக்கூடாது’ என்ற பழமொழிக்கேற்ப இருங்கள் என்று பயங்கரமாக விமர்சித்து வருகின்றனர். இது குறித்து சுர்ஜித் பெற்றோர்கள் கூறியது, தங்களுடைய சொந்தமான தோட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பே போர்வெல் போடப்பட்டிருந்தார்கள். ஆழ்துளை கிணறு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில் மழை பொழிவால் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர்கள் கூறினார்கள்.

Advertisement