சாப்பாடு எப்படி ஜீரணிக்கிறது. உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா? – அஜய் தேவ்கன் காரை மறைத்து வெளுத்து வாங்கியுள்ள ஆட்டோ ஓட்டுனர்.

0
1553
- Advertisement -

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லி எல்லையில், 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கடந்த சில வாரங்களாக போராடி வருகின்றனர். மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாததால், குடியரசு தினத்தன்று டில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். இதில், போலீசார் அனுமதிக்காத பகுதிகளிலும் சில விவசாயிகள் பேரணியை நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை தகர்த்து பேரணியை தொடர்ந்தனர். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.

-விளம்பரம்-
அஜய் தேவ்கன்

விவசாயிகள், போலீசாருக்கு இடையே நடந்த வன்முறையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக 200 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதே போல விவசாயிகள் போராட்டத்தில் சில கலவரவாதிகள் புகுந்ததால் தான் போராட்டம் கலவரலாமாக காரணம் என்றும் விவசாயிகள் சிலர் கூறி இருந்தனர். இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் போலீசாருக்கு ஆதரவராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நடிகர் அக்‌ஷய் குமார், கரண் ஜோஹர், சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர், அஜய் தேவ்கன் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜய் தேவ்கன் கடந்த இரண்டு தினத்திற்கு முன் மும்பையில் கொரேகாவுனில் (Goregaon) உள்ள ஃபிலிம் சிட்டிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரை பார்த்துள்ள ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஆட்டோவில் இருந்து இறங்கி அஜய் தேவ்கன் கார் முன்பு நின்று கொண்டு அஜய் தேவ்கனை காரில் இருந்து வெளியில் வரும்படியும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அஜய் தேவ்கன் ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்றும், அது குறித்து பேச வெளியில் வரும்படியும் கேட்டுள்ளார்.

பஞ்சாப் இவருக்கு சாப்பாடு போடுகிறது. ஆனால் இவர் விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறார். சாப்பாடு எப்படி ஜீரணிக்கிறது. உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா? ஏன் காரில் இருந்து வெளியில் வர மறுக்கிறீர்கள்?” என்று தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டேயிருந்தார். அந்நேரம் அஜய்தேவ்கனின் பாதுகாவலர் வந்து ராஜ்தீப்பை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றார். ஆனால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்அந்த ஆட்டோ ஓட்டுநர் . இதையடுத்து இது குறித்து அஜய் தேவ்கன் பாதுகாவலர் போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த ஆட்டோ ஓட்டுனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

-விளம்பரம்-
Advertisement