400 படங்களுக்கு மேல் நடிப்பு, 500 படங்களுக்கு மேல் பூஜை, 10 சிஷ்யர்கள்,தளபதி 67 பூஜை – கோலிவுட்டின் செண்டிமெண்ட் குருக்களின் அறிந்திராத பக்கம்.

0
757
Mangalanatha Gurukkal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான குருக்களாக திகழ்பவர் மங்களநாதன். சினிமாக்கள், சீரியல்களிலும் திருமண காட்சிகளில் மங்களநாதன் குருக்களை பார்க்கலாம். அதோடு புதுப்பட பூஜை என்றால் மங்களநாதனை கூப்பிடுங்க என்ற சொல்ற அளவுக்கு சினிமா வட்டாரத்தில் மிக பிரபலமானவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த தளபதி 67 படத்திற்கு கூட இவர் தான் பூஜை போட்டார். இந்த நிலையில் சமீபத்தில் மங்களநாதனை பிரபல சேனல் பேட்டி ஒன்றை எடுத்திருந்தது. அதில் அவர் கூறியிருந்தது, திண்டிவனம் பக்கத்தில் மேல் சேவூர் என்ற ஒரு சின்ன கிராமம் தான் என்னுடைய சொந்த ஊர்.

-விளம்பரம்-

அங்கிருந்து நான் மயிலாப்பூர் வந்தேன். மயிலாப்பூரில் வலம்புரி விநாயகர் கோயில் ரொம்ப ஃபேமஸ். அங்கே தான் நான் பூஜை பண்ணிட்டு இருந்தேன். அப்போ தினமும் ஒரு சாஸ்திரிகள் கோவிலுக்கு வருவார். அவர் சினிமா சம்பந்தப்பட்டவர் என்று தெரிந்துகொண்டேன். பின் அவர்கிட்ட எனக்கும் ஏதாவது சினிமா வாய்ப்பு இருந்தால் சொல்லுங்களேன் என்று சொல்லி வைத்தேன். அப்போ நான் பங்க் ஹேர் ஸ்டைல் விட்டிருந்தேன். சினிமாவுக்காக அதை குடுமியாக மாற்றி கட் பண்ணி கொண்டேன். ரொம்ப ஆர்வமாக இருக்கிறேன் என்று பாராட்டினார் சாஸ்திரி.

- Advertisement -

மங்களநாதன் சினிமா பயணம்:

முதல்முறையாக ஏவிஎம் ஸ்டூடியோவில் நம்பிக்கை என்ற ஒரு சீரியலுக்கு பூஜை பண்ண வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். பின் சில நாள் கழித்து பக்தி சரணு ஒருத்தர் போன் பண்ணி சூர்யா சார் படத்துக்கு பூஜை பண்ண வர முடியுமா? என்று கேட்டார். இது அக்ரஹாரத்தில் நடக்கிற கதை. அதனால் வரும் போது 50 மாமிகளையும் ஷூட்டிங் கூட்டிட்டு வாங்க என்று சொன்னார். அதுதான் சூர்யா சார் நடித்த ஸ்ரீ படம். அன்று தொடங்கி இன்று வரைக்கும் இருபது வருஷமாக இந்த பீல்டில் இருக்கிறேன். அஜித்-விஜய் என்று பெரிய பெரிய நடிகர்கள் படங்கள் எல்லாம் பூஜை போட்டு இருக்கேன். மொத்தமாக 500 படங்களுக்கும் மேல பூஜை போட்டு இருக்கிறேன். நான் 400 படத்துக்கு மேல நடித்தும் இருக்கிறேன்.

மங்களநாதன் வளர்ச்சி:

மேலும், நான் பூஜை போட்டால் அந்த படம் பெரிய ஹிட்டாகும் என்று ஒரு நம்பிக்கை. எனக்கு பத்து அசிஸ்டன்ஸ் வேற இருக்கிறார்கள். ஏன்னா, சில நேரம் பல படத்தோட பூஜைகள் ஒரே நாளில் வரும். நான் போக முடியாத இடங்களுக்கு அவர்களை அனுப்பி வைப்பேன். என் அசிஸ்டன்ட் கூட்டத்தை பார்த்து சந்தானம் சார் ஆச்சரியப்பட்டார். நானும் உங்களுக்கு அசிஸ்டன்ட்டாக வந்துடுவா என்று கலாய்த்தார். நிறைய லவ்வர்ஸ் அவங்க காதல் ஜெயிக்க பூஜை பண்ண சொல்லி வருவாங்க. நான் மயிலாப்பூரில் நிறைய லவ் மேரேஜ் பண்ணி வைத்திருக்கிறேன். சட்டப்படி அவங்க கல்யாணத்துக்கு ரிஜிஸ்டர் ஆபீஸில் கையெழுத்து எல்லாம் போட்டு இருக்கேன்.

-விளம்பரம்-

மங்களநாதன் இறப்பு குறித்த வததந்தி:

இப்படி எவ்வளவோ பேருக்கு நல்லது பண்ணி இருக்கேன். ஆனால், சிலர் மட்டும் தான் எனக்கு கெட்டது பண்றாங்க. போன வருஷம் லாக் டவுனில் யாரோ ஒரு புண்ணியவான் நான் இறந்து விட்டதாக சோசியல் மீடியாவில் ஒரு போஸ்ட் போட்டு இருந்தான். அதை பார்த்துட்டு எல்லோரும் என்ன ஆச்சு என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். உடனே போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால், இதுவரை அவர் யார் என்று கண்டுபிடிக்க தெரியவில்லை? இதில் காமெடி என்னவென்றால் ஒரு டிவி சேனலில் மங்களத்துக்கு மங்களம் பாடிட்டாங்கா! எல்லாம் நியூஸ் போட்டு இருந்தாங்க.

விஜய் -அஜித் குறித்து சொன்னது:

விஜய் சார் நடித்த பைரவா படத்துக்கு பூஜை போட போய் இருந்தேன். நான் அதிகாலையில் எழுந்து போனதால் அசதியில் அப்படியே தூங்கிவிட்டேன். திடீரென்று என் காதில் யாரோ குச்சி வைத்து குடையற மாதிரி இருந்தது. எழுந்து பார்த்தால் விஜய் சார் என் காதில குச்சி விட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அதே மாதிரி வரலாறு சூட்டிங்கில் பைக் சாவியை விரலில் மாட்டிக் கிட்டு மந்திரம் சொல்லிட்டு இருந்தேன். அதை கவனித்த அசின் மேடம் அதை அஜித் சார் கிட்ட சொல்ல, அவர் ஹைடெக் ஐயர் அப்படித்தான் இருப்பார் என்று பல விஷயங்களைப் பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement