எப்படி ஆரம்பிச்சது,எப்படி முடிஞ்சிருக்கு பாத்திங்களா ? – விமர்சித்த நபருக்கு மணிமேகலை கொடுத்த நச் பதில்.

0
551
- Advertisement -

சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக வேலை பார்த்து இருந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் தனியார் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். பின் மணிமேகலை மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார்.இதனால் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்கவில்லை

-விளம்பரம்-

இதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர் பல மாதங்கள் இவர்கள் இருவரும் தனியாக தான் வசித்து வந்தார்கள். மணிமேகலை தம்பி மட்டும் இவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொண்டார். இதனால் அவர் மட்டும் இவர்களை அடிக்கடி சந்தித்து வந்தார்.

- Advertisement -

இரண்டு குடும்பத்தினரின் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தங்களின் வாழ்க்கை துவங்கிய உசேன் மற்றும் மணிமேகலை படிப்படியாக முன்னேறி இன்று சொந்தமாக நிலம், கார் என்று வசதியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவருமே திருமணத்திற்கு பின்னர் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியிருந்தார்கள். அதில் இவர்கள் பதிவிடும் எதார்த்தமான வீடியோக்கள் பார்வையாளர்களை கவர, இவர்களது யூடியூப் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து.

யூடியூப் மூலமே இவர்களுக்கு மாதம் பல லட்சம் வருமானம் கிடைத்தது. அதுபோக சின்னத்திரையில் பல ஆண்டுகளாக காணாமல் போன மணிமேகலை குப்பி வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் தான் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்தார். தற்போது இவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் ஒருவர் உசேன் மற்றும் மணிமேகலை ஆகிய இருவரின் திருமண புகைப்படத்தையும் ரம்ஜான் பண்டிகைக்கு உசேன் மற்றும் மணிமேகலை வெளியிட்ட புகைப்படத்தையும் பதிவிட்டு இதுதான் லவ் ஜிகாத் என்று விமர்சித்து இருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு பதிலடி கொடுத்த மணிமேகலை இப்படியே வாழ்க்கை முழுவதும் உளறிட்டடே இருக்கிறதுக்கு உருப்படியா போய் வேலைய பாக்கலாம் இல்ல என்று கூறியுள்ளார். மணிமேகலை இப்படியான விமர்சனங்களை எதிர்கொள்வதும் அதற்கு பதிலடி கொடுப்பதும் இது முதல் தரை கிடையாது கடந்த 2020 ஆம் ஆண்டு ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த பதிவை பார்த்த நபர் ஒருவர் எப்படியோ மணிமேகலையை அவரது கணவர் மதம் மாற்றிவிட்டார் இதுதான் லவ் ஜிகாத் என்று விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மணிமேகலை தன்னுடைய கணவர் தன்னுடன் பொங்கல் வைத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘ரெண்டு வருஷமா போட்டுட்டு தான் இருக்கேன் சமீபத்தில் கூட ரெண்டு பேரும் போய் பொங்கல் வச்சோம் எப்படி ரம்ஜான் புகைப்படத்தை ஆழமா பார்க்கிற மாதிரி தீபாவளி பொங்கலுக்கு நான் போடும் புகைப்படத்தையும் பார்த்தா நானும் கொஞ்சம் சந்தோஷப்படுவேன்’ என்று பதிலடி கொடுத்தார்

Advertisement