இன்று தொலைக்காட்சியின் மிகப் பிரபலமாக மற்றும் youtube பிரபலமாக வளம் வரும் மணிமேகலை உசேன் பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை. தன்னுடைய நிலைப்பாட்டில் தன்னுடைய எண்ணங்களில் வெளிப்படுத்துவதில் தைரியமாகவும் முரண்பாடுகளுக்கு எதிராக குரல் தனித்திறமை படைத்தவர். இவர் 1993 ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி திருப்பூரில் பிறந்தார் இவர் பிஎஸ்சி எம்பிஏ முடித்துள்ளார். பள்ளி கல்லூரிகளில் கலையில் ஆர்வம் மிகுதி சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர். மணிமேகலை 17 வது வயதிலேயே அதாவது காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் பொழுது டிசம்பர் 2009 ஆம் ஆண்டு வீடியோ ஜாக்கியாக அறிமுகம் ஆனார்.
2011 முதல் இருந்து 2017 வரை மணிமேகலைக்கென்று சன் மியூசிக் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. காலை மற்றும் மாலை இருவேளைகளும் மணிமேகலைக்கு தனி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சிறப்பாக அவரது பணியை செய்தார்.சுறுசுறுப்பு மற்றும் விடாமுயற்சியினாலும் சன் மியூசிக் இல் தனக்கென ஒரு பெயரை பதித்தார். சன் மியூசிக் உலக நாயகன் கமலஹாசன் ஒரு நேர்காண எடுத்த பொழுது இவர் தொகுத்து வழங்கினார்.
மணிமேகலை திருமண வாழ்க்கை :
மணிமேகலை உசைன் என்னும் நடன மாஸ்டர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. மணிமேகலை தன் காதல் விருப்பத்தை தன்னுடைய வீட்டில் கூறிய பொழுது உசேன் வேற மதத்தவர் என்ற காரணத்தினால் அவரது வீட்டில் ஒரு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதனால் 2017 ஆம் ஆண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் இருவரும் தன் நண்பர்களுடன் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களின் வாழ்க்கை தொடக்கத்தில் வீடு கூட வாடகைக்கு கிடைக்காமல் ரோட்டில் அலை இருவரும் ஒரு வீடு வாடகைக்கு இருந்து தங்கினார்.
vijay tv vs youtube salary – #Manimegalai Reveals😂😂😂 pic.twitter.com/zNuN3tRhC6
— chettyrajubhai (@chettyrajubhai) January 18, 2023
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி :
இப்படி சன் மியூசிக் பிரபலமாக இருந்து 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற ஷோ மூலம் விஜய் டிவிக்கு அறிமுகம் ஆனார் மக்களுக்கு கோமாளி உலகம் முழுவதும் பரவலாக பாராட்டப்பட்டு அனைவராலும் பேசப்பட்ட ஒரு நிகழ்ச்சி தொடராக அமைந்தது இதில் மணிமேகலை குக் வித் கோமாளி சிறந்த கோமாளியாக தேர்வு செய்யப்பட்டார். இவரது சுட்டித்தனம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
யூடுயூப் வருமானம் :
கொரோனா லாக்டவுனில் நிறைய பேர் யூடியூப் சேனல் தொடங்கி காசு பார்த்து வருகிறார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் யூடியூப் சேனல் தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தொகுப்பாளினிகள் மணிமேகலை, பிரியங்காவும் தனியாக சேனலை தொடங்கி சம்பாதித்து வருகின்றனர்.அதோடு இதில் அவர் நன்றாக சம்பாதித்து வருகிறார்.
விஜய் டிவியா யூடுயூபா :
இதன் மூலம் சொகுசு கார், பைக், HM லேண்ட் என்று ஒட்டுமொத்தமாக மணிமேகலையின் சொத்து மதிப்பு மட்டும் $1 Million – $5 Million வரை இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 7.82 கோடி முதல் 35 கோடி வரையாகும். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மணிமேகளையிடம் விஜய் டிவியில் அதிக வருமானம் வருகிறதா இல்லை யூடியூபில் அதிக வருமானம் வருகிறதா என்று ரசிகை ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு மணிமேகலை யூடியூபில் தான் அதிக வருமானம் என்று படு ஓப்பனாக கூறி இருக்கிறார்.