பொன்னியின் செல்வன் தமிழ் ட்ரைலரில் ‘நாராயணா’ என்ற வசனம் இடம்பெறாத காரணம் குறித்து மணிரத்னம் விளக்கமளித்துள்ளார். அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கி இருக்கிறார். இவர் எப்போதும் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
அந்த வகையில் தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்கி இருக்கிறார். இதை படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது.
பொன்னியின் செல்வன் படம்:
அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
படத்தின் டீசர் :
இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முழுமையாக நிறைவடைந்து விட்டது.இந்த படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.
நாராயணா வசனம் :
அந்த ட்ரைலரில் நம்பியாக நடித்து இருக்கும் ஜெயராம் ஒரு காட்சியில் ‘ஐயயோ’ என்று அலறி இருப்பார். இந்த வசனம் தான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே இதே போல மற்ற மொழிகளில் வெளியான ட்ரைலரில் ‘ஐயயோ’ விற்கு பதிலாக ‘நாராயணா’ என்று கூறி இருப்பார் ஜெயராம். ஆனால், தமிழில் மட்டும் அவர் ‘நாராயணா’ என்று சொல்லாமல் ‘ஐயயோ’ கூறியது ஏன் என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
மணிரத்னம் விளக்கம் :
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் ‘நாராயாணா, இப்படி ஒரு கேள்விக்கு நான் பதில் சொல்லனுமா ? நீங்கள் படம் பாருங்க அவர் படம் முழுதும் நாராயணா என்று தான் சொல்வார். இந்த படத்தில் நாவலில் இருந்து பல மாற்றங்கள் இருக்கும். ஆனால், கல்கியின் உயிரோட்டம் கண்டிப்பாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.