பொன்னியின் செல்வனில் வைரமுத்து பணியாற்றதது ஏன் ? – மணிரத்னம் கொடுத்த விளக்கம்.

0
273
mani
- Advertisement -

பொன்னின் செல்வன் படத்தில் வைரமுத்து இடம் பெறாதது குறித்து மணிரத்தினம் கூறி இருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் மணிரத்தினம். இவர் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’.

-விளம்பரம்-
ponniyinselvan

பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இதை படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது.

படத்தின் டீசர் :

இந்த படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில வாரங்களுக்கு முன் தான் பிரம்மாண்டமாக படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு விறுவிறுப்பாக நடத்தி வருகிறது.

-விளம்பரம்-

செய்தியாளர்கள் சந்திப்பு:

அதன் முதற்கட்டமாக செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், திரிஷா, மணிரத்தினம் உட்பட பலர் பங்கேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார்கள். அப்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அன்கட் வெர்ஷன் டிஜிட்டலில் கிடைக்குமா? என்று கேட்ட கேள்விக்கு இயக்குனர் மணிரத்தினம், அன்கட் வர்ஷனுக்கு நீங்கள் புத்தகத்தை தான் படிக்க வேண்டும். ஷூட் செய்த அனைத்தும் படத்தில் வைத்து விட்டேன் என்று கூறியிருந்தார்.

வைரமுத்து குறித்த கேள்விக்கு மணிரத்தினம் சொன்னது:

இதனை அடுத்து படத்தில் வைரமுத்து இடம்பெறாதது ஏன்? என்ற கேள்விக்கு வைரமுத்து உடன் இணைந்து பல திரைப்படங்கள் பணியாற்றி விட்டோம். புதிய திறமையாளர்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த முடிவு. இந்த புத்தகத்தை சிறுவயதிலிருந்தே நான் பலமுறை படித்து இருக்கிறேன். படிக்கும்போதெல்லாம் இது திரைப்படத்திற்கான நாவல் என்றுதான் எனக்கு தோன்றும். பட்டை, நாமம் இந்த விவாதத்தை ஒரு காட்சியை வைத்து முடிவு செய்யக்கூடாது. புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அனைத்தும் இந்த படத்தில் இருக்கிறது. சில மாற்றங்கள் மட்டும்தான் நடந்திருக்கிறது என்று பொன்னியின் செல்வன் படம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை மணிரத்தினம் பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement