அவர் தான் இந்தி தெரியாது போடான்னு முதல்ல பண்ணதுன்னு நெனைக்கிறேன் – கமல் சொன்ன விஷயம். வைரல் வீடியோ.

0
430
maniratnam
- Advertisement -

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த மும்மொழி கொள்கை விவகாரம் சமூக வலைத்தளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அந்த சமயத்தில் இந்தியை கட்டாய படமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும், தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.பல மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்ற நிலையில், இந்த கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

-விளம்பரம்-

இதனால் ட்விட்டரில் ட்விட்டரில் கூட #இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ் டேக் கூட அடிக்கடி ட்ரெண்ட் ஆனது. இதைத் தொடர்ந்து, இந்தி தேசிய மொழியா அல்லது இந்தியாவின் இணைப்பு மொழியா? அல்லது இந்தியாவின் இணைப்பு மொழி எது என்ற விவகாரம் சினிமா உலகினர் மத்தியிலும் சமூக ஊடகங்களிலும் விவாதிக்கப்படும் சர்ச்சையாகி உள்ளது. மேலும் பல தமிழ் நடிகர் நடிகைகளும் இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி ஷர்ட்டை போட்டுகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர்.

- Advertisement -

இதையும் பாருங்க : ஜிபி முத்து முதல் ஸ்ரீநிதி வரை – பிக் பாஸ் 6ல் கலந்துகொள்ள இருக்கும் 17 போட்டியாளர்களின் லிஸிட்.

மணிரத்னம் குறித்து கமல் :

இப்படி ஒரு நிலையில் இந்தி மொழி தொடர்பான மணி ரத்னத்தினத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மணிரத்தினம் மதுரையில் பிறந்தாலும் படித்ததும் தன்னுடைய இளமை காலத்தை கழித்ததும் எல்லாம் மும்பையில் தான் அப்படி இருந்தும் மணிரத்தினம் இந்தி கற்றுக் கொள்ளவில்லை அவ்வளவு ஏன் மணிரத்தினம் நாயகன் படத்தை இயக்கிய போது வரதராஜ முதலியாரை நேரில் சந்தித்து பேசி அவர் சொன்ன அவரது வாழ்க்கை கதையை வைத்து தான் நாயகன் படத்தை எடுத்திருந்தார் அந்த படத்தில் கூட வரதராஜ முதலியாராக நடித்த கமல் மும்பையில் பிழைத்தாலும் ஹிந்தி அவ்வளவாக பேச மாட்டார்.

-விளம்பரம்-

மும்பையில் படித்தாலும் No இந்தி :

அப்படி தன்னுடைய படங்களில் கூட இந்தி மொழியை அவ்வளவாக திணிக்கத்தவர் மணிரத்தினம். இப்படி ஒரு நிலையில் மணிரத்னம் தான் இந்தி தெரியாது போட என்பதை மறைமுகமாக ஆரம்பித்தவர் என்று கமல் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பேசி இருக்கும் கமல் மணிரத்தினம் இந்தி பேச மாட்டார் அவருக்கு இந்தி தெரியாது. ஆனால் மும்பையில் தான் படித்தார்.

இந்தியில் கேள்வி கேட்ட பத்திரிகையாளர் :

அது அவருக்கு ஒரு வீம்பு. அவர்தான் இந்தி தெரியாது போடா என்று அப்போதே ஆரம்பித்தவர் என்று நினைக்கிறேன் என்று கமல் பேசியிருக்கிறார். அதேபோல சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக மணிரத்தினம் வட இந்திய பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருந்தார். அப்போது வட இந்திய பத்திரிக்கையாளர் ஒருவர் மணிரத்தினத்திடம் இந்தியில் கேள்வி கேட்டிருந்தார்.

விழுந்து விழுந்து சிரித்த ஏ ஆர் ரஹ்மான் :

அவர் கேட்ட கேள்வியை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த மணிரத்தினம் அவர் கேள்வியை கேட்டு முடித்த பின்னர் மைக்கை வாங்கி அருகில் இருந்த ஐஸ்வர்யா ராயிடம் ‘அவர் என்ன சொன்னார்’ என்று கேட்டிருந்தார். இதை கேட்டதும் ஐஸ்வர்யா ராயும் விழுந்து விழுந்து சிரிக்க அருகில் இருந்து ஏ ஆர் ரகுமானும் புன்னகைத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement