நடிகர் மணிவண்ணன் இறப்பிற்கு காரணம் இதுதான் என்று அவருடைய சகோதரி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . தென்னிந்திய சினிமா திரை உலகில் உதவி இயக்குனராக அடி எடுத்து வைத்து பின் பல வெற்றிப்படங்களை இயக்கி வெற்றி கண்டது மட்டுமில்லாமல் ஒரு நடிகராகவும் வெற்றி கண்டவர் மணிவண்ணன். இவர் சினிமா திரை உலகில் நடிகர், இயக்குனர் ஆக மட்டும் இல்லாமல் தமிழ் உணர்வாளர் ஆகவும் பங்காற்றி இருந்தார்.

இவர் தமிழில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகராக நடித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் 50 திரைப்படங்களை அவரே இயக்கியும் இருந்தார். மணிவண்ணன் அவர்கள் நடிகர் சத்யராஜின் நெருங்கிய நண்பரும் ஆவார். அதனாலே மணிவண்ணன் சத்யராஜை வைத்து 25 படங்கள் எடுத்து இருக்கிறார். மேலும், இவர் படங்களில் வில்லன், குணச்சித்திரம் வேடங்களிலும் நடித்து இருக்கிறார். இதனிடையே மணிவண்ணனுக்கு செங்கமலம் என்ற மனைவியும் ,ரகுவண்ணன் என்ற மகனும்,ஜோதி என்ற மகளும் இருக்கிறார்கள்.

Advertisement

மணிவண்ணன் இறப்பு :

இப்படி ஒரு நிலையில் மணிவண்ணனுக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சையும், முதுகு தண்டுவட அறுவை சிகிச்சையும் செய்து இருந்தார்கள். அதனாலேயே சில ஆண்டுகள் இவர் இயக்காமலும், நடிக்காமலும் சினிமா துறையில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு ஓய்வுபெற்று இருந்தார். பின் இவர் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதுகு வலிப்பதாக கூறி இருந்தார். பின்னர் என்ன? நடந்தது என்று தெரியவில்லை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயக்கம் போட்டு கீழே விழுந்து மணிவண்ணன். உயிரிழந்தார்

இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இவருடைய மரணத்திற்கு காரணம் அதிகமாக குடித்து இருந்தது என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக மணிவண்ணன் சகோதரி பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய அண்ணன் எனக்கு ஒரு அண்ணனாக மட்டுமில்லாமல் அப்பா- அம்மாவாகவும் இருந்து என்னை பார்த்துக்கொண்டார். அவர் இறந்து 10 வருடம் ஆகிவிட்டது. நான் என்ன ஆசைப்பட்டாலும் உடனே அதை வாங்கி கொடுத்து விடுவார். அண்ணியும் அப்படிதான் என்னை பார்த்துக்கொண்டார்.

Advertisement

அவரும் என்னை ஒரு மகள் போல தான் பார்த்தார். அண்ணன் இறப்பு குறித்து .பல வதந்திகள் பரவிருந்தது அவர் குடியால் தான் இறந்துவிட்டார் என்ற செய்திகளெல்லாம் வந்தது. உண்மையில் அவர் குடியால் இறக்கவில்லை. அண்ணன் இறப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே குடியை நிறுத்திவிட்டார். எங்கள் அம்மா இறந்து துக்கத்தின் போது கூட அண்ணன் மீண்டும் குடிக்கவில்லை. இதை தொடர்ந்து என்னுடைய அன்னிக்கு புற்றுநோய் இருந்தது. அந்த விஷயம் அண்ணனுக்கு தெரிய வந்தது. இதனை மருத்துவர்கள் அண்ணனிடம் மட்டும் தான் கூறினார்கள்.

Advertisement

கடைசி கட்டத்தில் அண்ணி இருந்ததால் அவரை காப்பாற்றுவது கடினம் என கூறிவிட்டார்கள். இந்த துக்கத்தை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு யாரிடமும் சொல்லாமல் அண்ணன் தனக்குள்ளே குமரி அழுது இருக்கிறார். கடைசியாக அவர் பேட்டி ஒன்றும் கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் கால் இடறி கீழே விழுந்ததில் அடிபட்டிருந்தது. இதனால் சுமார் இரண்டு மாதங்கள் வரை அவர் உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். அதன் பிறகு தான் இறந்தார். என்னுடைய அண்ணன் இருந்த சில மாதங்களிலேயே என்னுடைய அண்ணியும் இறந்து விட்டார் என்று கூறினார்.

Advertisement