திருமணம் நெருங்கும் வேலையில் தன் இன்ஸ்ட்டா புகைப்படங்களை நீக்கிய மஞ்சிமா – அதற்கு அவர் சொன்ன காரணம்.

0
434
manjima
- Advertisement -

விரைவில் கெளதம் கார்த்திகை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் இன்ஸ்டா புகைப்படங்களை டெலிட் செய்தது குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு மஞ்சிமா மோகன் அளித்த பதில் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் மஞ்சிமா மோகன். இவர் கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 90 காலகட்டத்தில் இறுதியில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கதாநாயகியாக வலம் வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் முதன் முதலாக மலையாள மொழி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பின் சிறிய இடைவேளை எடுத்து கொண்டு 2016ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்து இருந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் மஞ்சிமா மோகன். இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

- Advertisement -

மஞ்சிமா மோகன் திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் தேவராட்டம், சத்ரியன் என சில படங்களில் நடித்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். பிறகு சிறிது காலம் மஞ்சுமா மோகன் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதற்கு காரணம் இவருக்கு ஏற்பட்ட விபத்து தான்.

மஞ்சிமா மோகன் ஏற்பட்ட விபத்து:

இவருக்கு ஏற்பட்ட விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டது. இதற்காக இவர் தீவிர சிகிச்சை பெற்று இருந்தார் . அதற்குப் பிறகு இவருக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டு ட்ரீட்மென்ட் செய்து கொண்டிருந்தார். இதனால் இவர் சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டார். அதனால் இவருடைய உடை எடை கொஞ்சம் வெயிட் போட்டு விட்டது என்றே சொல்லலாம். இருந்தாலும், மஞ்சுமா மோகன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

-விளம்பரம்-

மஞ்சிமா மோகன் நடித்த படம்:

சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த எப்ஐஆர் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தினை மனு ஆனந்த் என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மஞ்சிமா மோகன் அவர்கள் தன்னுடைய அனைத்து இன்ஸ்டாகிராம் புகைப்படங்களையும் டெலிட் செய்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள், புகைப்படங்களை நீக்கியதற்கு காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள்.

மஞ்சிமா மோகன் பதில்:

அதற்கு மஞ்சிமா மோகன் கூறி இருப்பது, இன்ஸ்டாகிராம் மக்களுடன் இனைவதற்கு ஒரு சிறந்த இடம் என்பதை உணர்ந்தேன். Instagram பக்கத்தின் அழகை பற்றி கவலைப்பட வேண்டாம். அதனால் எனது பெரும்பாலான இன்ஸ்டாகிராம் படங்களை archive செய்து விட்டேன். நான் எப்போதுமே இப்படி இல்லை. என் மீது நானே மிக குறைந்த மரியாதையை கொண்டிருக்கிறேன். மேலும், என்னை பற்றி நிறைய சந்தேகம் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது நான் முன்பை விட அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன். இன்னும் அதை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement