தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் எல்லாம் மலையாள மொழியில் இருந்து வந்தவர்கள் தான். மலையாள நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகின்றனர். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ரசிங்கர்களை தன் பக்கம் சுண்டி இழுத்தவர் நடிகை மஞ்சிமா மோகன். கேரளாவில் உள்ள பாலக்காட்டை பூர்விகமாக கொண்டவர். நடிகை மஞ்சிமா மோகன் தந்தை ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் தாயார் ஒரு நடன கலைஞர் ஆவார். இவர் 1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.
இவர் மதுரமனோம்பர்கட்டு, சுந்தர புருஷன், தாண்டவம், படங்களில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இவர் 2015 ஆம் ஆண்டு ஒரு வடக்கன் செல்பி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்த படம் வெளியானதை தொடர்ந்து தான் மஞ்சுமா மோகனுக்கு தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் மஞ்சிமா மோகன். அதற்குப் பின்னர் தமிழில் சில படங்களில் நடித்தார். தமிழில் நடிகை மஞ்சு மோகன் சத்திரியன், இப்படை வெல்லும், தேவராட்டம் என வரிசையாக சில படங்களில் மட்டும் தான் நடித்து வந்தார். பின் இவர் மலையாளம் ,தெலுங்கு ,தமிழ் என பல மொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் நடிக்க மஞ்சுமா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் அவர்கள் சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீப காலமாகவே நடிகைகள் எல்லோரும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதை தற்போது ட்ரெண்டிங் ஆக்கி விட்டார்கள். பல நடிகைகள் மேக்கப் போடாத புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகை மஞ்சிமா மோகன் அவர்களும் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் ரசிகர்கள் பலர் நடிகை மஞ்சிமா மோகனா!! இது என்று வாயை பிளக்கும் அளவிற்கு கேட்டு வருகிறார்கள். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்ககு சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை என பலர் சோசியல் மீடியாவில் தான் உள்ளார்கள்.